spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபோலி வாக்குகள் எதிரொலி! முடங்கிய பாராளுமன்றம்! கர்நாடகாவில் களத்தில் இறங்கிய ராகுல்! வாஞ்சிநாதன் நேர்காணல்!

போலி வாக்குகள் எதிரொலி! முடங்கிய பாராளுமன்றம்! கர்நாடகாவில் களத்தில் இறங்கிய ராகுல்! வாஞ்சிநாதன் நேர்காணல்!

-

- Advertisement -

இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் துணையோடு செய்திருக்கும் வாக்கு திருட்டு மோசடியானது, அரசியலமைப்பின் அடித்தளத்தை, ஜனநாயகத்தை தகர்க்கக்கூடிய ஒரு போர் ஆகும் என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

தேர்தல் மோடிகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட பெங்களுரு மத்திய தொகுதியில் தேர்தல் மோசடி தொடர்பான விவரங்கள் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராகுல்காந்தி நாட்டில் தேர்தல் திருடப்பட்டுள்ளது என்று சொல்கிறார். ஆனால் இதற்கான எதிர்வினை என்ன என்பது தான் என்னை அச்சப்பட வைத்துள்ளது. பெரிய அளவில் எந்த எதிர்வினையும் இல்லை. பிரதமர் மோடி, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மிகப்பெரிய அளவில் எதிர்ப்போ, போராட்டங்களோ நடைபெறாமல் நாடாளுமன்றத்தில் சில எம்.பிக்கள் மட்டும் கோஷம் போட்டால் போதுமா? இதனுடைய அபாயம் என்ன என்று மக்களுக்கு புரிதல் இல்லை. அரசியல் கட்சிகள் தெரிந்தும் ஏன் மௌனம் காக்கின்றன என்று தெரியவில்லை.  தேர்தல் ஆணையம் பாஜகவின் துணையோடு செய்திருக்கும் இந்த மோசடியானது, இந்திய அரசியலமைப்பின் அடித்தளத்தை, ஜனநாயகத்தை தகர்க்கக்கூடிய ஒரு போர் ஆகும்.

பெங்களுரு மத்திய மக்களவை தொகுதியில் உள்ள மகாதேவ்புரா சட்டமன்றத் தொகுதியை காங்கிரசை சேர்ந்த உண்மை கண்டறியும் குழுவினர் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து, அவர்கள் கண்டறிந்தவை மிகவும் அதிர்ச்சிகரமானவை ஆகும். முதலாவது மகாதேவ்புரா தொகுதியில் மட்டும் போலி வாக்காளர்கள் 11,965 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்பதை ஆதரப்பூர்வமாக வெளியிட்டனர். இரண்டாவது போலி முகவரி கொடுத்து 49 ஆயிரத்து 9 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அந்த முகவரியை நேரடியாக ஆய்வு செய்கிறபோது, அப்படி பட்ட வாக்காளரே அங்கு கிடையாது என்பது தெரியவருகிறது. மூன்றாவது குற்றச்சாட்டு ஒரே முகவரியில் நிறைய வாக்காளர்களின் பெயர்கள் உள்ளன. இப்படி 10,452 பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.  4,132 நபர்களுக்கு புகைப்படங்கள் பொருந்தவில்லை. 5வதாக புதிய வாக்காளர் சேர்ப்பில், அந்த தொகுதியில் இல்லாத பல பேர் மோசடியாக சேர்க்கப்பட்டுள்ளனர். அப்படி 33,692 பேர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த தொகுதியில் பாஜக 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஒட்டுமொத்தமாக போலி வாக்காளர்களை வைத்துதான் அந்த தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

காங்கிரஸ் உண்மை அறியும் குழுவின் ஆய்வில் ஒரே வீட்டில் உள்ள ஒரு அறையில் 46 பேர் உள்ளனர். அதேபோல் ஒரே முகவரியில் 80 பேர் உள்ளனர். அங்கு சென்று ஆய்வு செய்தபோது அவர்கள் அங்கு இல்லை. அந்த வீடுகளின் புகைப்படங்களை எடுத்து ஆதாரமாக வெளியிடுகின்றனர். 153 டியர் கிளப் என்கிற முகவரியில் மட்டும் 68 பேர் உள்ளனர். அங்கு சென்று பார்த்தால் யாருமே அங்கு கிடையாது. இப்படி மோசடியாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். ராகுல்காந்தி நாங்கள் ஒரு தொகுதியை ஆய்வு செய்தோம். நாடு முழுவதும் இதுதான் நடைபெற்றுள்ளது என்று சொல்கிறார். குறிப்பாக ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், இரண்டு இடங்களிலும் தோற்றார்கள். நாடு முழுவதும் இந்த மோசடிகள் நடைபெற்றுள்ளபோது தமிழ்நாட்டில் ஏன் நடைபெற்றிருக்காது? என்கிற கேள்வி எழுகிறது. தற்போது பாஜக 11 சதவீத வாக்குகளை வாங்கிவிட்டது. அடுத்த முறை பாஜக வெற்றிபெற்றாலும் சந்தேகம் வராத வகையில் ஒரு மோசடியை கட்டமைக்கிறார்கள்.

தேர்தல் களம் சூடுபிடிக்கிறது... முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்!

ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு தற்போது வரை பாஜக பதில் அளிக்கவில்லை.  தேர்தல் ஆணையம் இந்த மோசடி குறித்து விசாரணைக்கு தயார் என்றுதான் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் ராகுல்காந்தியை மிரட்டும் வகையில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய சொல்கிறார்கள். முதலில் ராகுல்காந்தியின் மோசடி குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. பாஜகவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவிக்கவில்லை. இத்தகைய மோசடிதான் இன்றைக்கு பீகாரில் நடந்துகொண்டிருக்கிறது. SIR எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் 65 லட்சம் மக்களை நீக்கியுள்ளனர். அப்படி நீக்கப்பட்டவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை இதுவரை பொதுவெளியில் வழங்கவில்லை. வாக்காளர்களை சேர்ப்பதற்கு தான் தேர்தல் ஆணையமே தவிர, அவர்களை நீக்குவதற்கு அல்ல என்று உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளது. பீகாரில் நடைபெறும் மோசடி என்பது, ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆயிரம் மடங்கு வலு சேர்க்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ