Homeசெய்திகள்கட்டுரைபெருவிழாவாகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்தியாவின் 80வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றி...

பெருவிழாவாகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்தியாவின் 80வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றி முதலமைச்சர் விஜய் மரியாதை!

-

- Advertisement -

இந்தியாவின் 80வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவுக்குப் பெற்ற சுதந்திரத்தின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் இத்திருநாள் மிகுந்த தேசப்பற்றுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான சுதந்திர தின விழா சென்னையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.பெருவிழாவாகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்தியாவின் 80வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றி முதலமைச்சர் விஜய் மரியாதை!

வாகன அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு
மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே வந்த முதலமைச்சர் விஜயின் வாகனத்தை, காவல் துறையினர் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுப்பு மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இந்த பிரம்மாண்ட வரவேற்பை தொடர்ந்து, சென்னை கோட்டை கொத்தளத்தை வந்தடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், தேசியக் கொடியை ஏற்றி வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு, அவர் பங்கேற்கும் முதல் சுதந்திர தின விழா என்பதால் இது அரசியல் மற்றும் பொதுமட்டத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

we-r-hiring

பெருவிழாவாகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்தியாவின் 80வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றி முதலமைச்சர் விஜய் மரியாதை!

பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு
இவ்விழாவில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், பல்வேறு துறைச் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும், இந்த பெருவிழாவில் முதலமைச்சரின் தந்தை சந்திரசேகர் மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர். நாட்டின் சுதந்திர தின விழாவையொட்டி சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சாதனை வைராக்கியம்: இரண்டு முனைவர் பட்டங்கள், ஒரு எம்பிஏ; 51 வயதில் நீட் தேர்வில் வென்று அரசு எம்பிபிஎஸ் சீட் பெற்ற சாதனையாளர்!

MUST READ