spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைமதுரை பொதுக்குழு! திமுகவின் அதிபயங்கர திட்டம்! கிடைக்கப் போகும் பலன் என்ன?

மதுரை பொதுக்குழு! திமுகவின் அதிபயங்கர திட்டம்! கிடைக்கப் போகும் பலன் என்ன?

-

- Advertisement -

மதுரை மக்களிடையே கடந்த காலங்களில் உள்ள திமுக மீதான கசப்புணர்வை போக்கவும், பாஜகவின் வளர்ச்சியை தடுக்கும் விதமாகவே திமுக பொதுக்குழு மதுரையில் கூட்டப்பட்டாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மதுரையில் திமுக பொதுக்குழு நடைபெற்றது குறித்தும், அதற்கான நோக்கம்  குறித்தும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியுப் சேனலில் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மதுரையில் திமுகபொதுக்குழு மற்றும் ரோடுஷோ நிகழ்ச்சி பரபரப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கான வரவேற்பு ஆகட்டும், அவர் பங்கேற்ற கூட்டங்கள் ஆகட்டும், திமுக ஒரு புதிய எழுச்சியில் இருந்துள்ளது. அழகிரி, தென்மண்டல பொறுப்பாளராக இருந்த காலகட்டங்களில் கட்சிக்கு பிளஸ்-ம் இருந்தன. மைனசும் இருந்தன. கட்சி அதிகாரம் மிக்கதாக இருந்தாலும், மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்பட்டது. அதற்கு காரணம் அழகிரியின் உடன் இருந்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அது கடந்த காலம். அதெல்லாம் தற்போது முடிந்துவிட்டன. காலங்கள் மாறிவிட்டன. தற்போது திமுகவின் டார்கெட் என்ன என்றால்? மதுரையில் 10 தொகுதிகள் உள்ளன. அவற்றில் 5ல் திமுகவும், 5ல் அதிமுகவும் வெற்றிபெற்றுள்ளன. எப்போது திமுக 5 இடங்களை வென்றது என்றால்? ஜெயலலிதாவும் இல்லை. அந்த கட்சியில் எந்த தலைவரும் இல்லை. மதுரையில் உள்ள பெரும்பாலான சாதியினருக்கு தொடர்பு இல்லாத எடப்பாடி பழனிசாமி முதல்வராக உள்ளார் என்று பல்வேறு குறைகளை வைத்திருந்தாலும் அதிமுக 5 இடங்களை வென்றுள்ளது.

இதற்கு என்ன காரணம் என்றால் கடந்த காலங்களில் திமுக மீது இருந்த பழைய வெறுப்பு ஆகும். அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வந்தது. இருந்தபோதும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 5 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது என்பது, திமுக மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பு இன்னும் மறையவில்லை என்பதை காட்டியது. அந்த 5 இடங்களில் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் போன்றவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது பி.டி.ஆர் வருகை, கட்சியில் நிறைய மாற்றங்கள் கொண்டுவந்து, பழைய ஆட்கள் எல்லோரையும் ஓரம்கட்டினார்கள். கட்டப் பஞ்சாயத்து, இடத்தை பறிப்பவர்களை என்கிற திமுக மீதான புகார்கள் கடந்த 10 வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்திருக்கிறது. அப்படி இருக்கிற நிலையில், பாஜக உள்ளே புகுகிறது. மதுரை மத்திய மற்றும் கிழக்கு தொகுதிகளில் சௌராஷ்ட்டிரா மக்கள் அதிகளவில் உள்ளனர். அதில் ஒரு தொகுதியில் பி.டி.ஆர். வெற்றிபெற்றார். மற்றொரு தொகுதியில் அதிமுக தோற்றது. இந்த தொகுதிகளை உள்ளடக்கிய எம்.பி. தேர்தலில் சு.வெங்கடேசன் வெற்றிபெற்றார்.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 இடங்களில் 8 இடங்களையாவது கைப்பற்றினால்தான் திமுகவுக்கு சிறப்பு ஆகும். ஏனென்றால் அதிமுக பலவீனமடைந்து காணப்படுகிறது. அந்த கட்சியின் சார்பில் பலவீனமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேலும் பாஜகவோடு கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது. இதனால் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். அதேவேளையில், மதுரையில் பாஜக குறிப்பிடத்தக்க அளவிலான வளர்ச்சியை கண்டிருக்கிறது. அதற்கு காரணம் திமுக எதிர்ப்பு வாக்குகள் எல்லாம், அதிமுகவில் பலவீனமான வேட்பாளர் நிற்பதால், பாஜகவுக்கு விழுகிறது. இதனை உடைத்து பாஜகவை அடியோடு பிடுங்கி எறிய வேண்டும் என்பதற்காக தான் திமுக பொதுக்குழு கூட்டத்தை மதுரையில் நடத்தியதாக சொல்கிறார்கள். மேலும் குறிப்பிட்ட ஒரு சில சமுதாயத்தினருக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்கிற வாதம் எழுகிறது. அதிமுகவில் அந்த சமுதாயத்தை சேர்ந்த 3 முதல் 4 பேர் அமைச்சராக இருந்தார்கள். ஆனால் திமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு தான் கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.

மதுரையில் உள்ள 2 நுழைவு வாயில்களை இடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் சவுராஷ்டிரா சமுதாய மக்களின் வாக்குகளை பெருமளவுக்கு திமுக பக்கம் திருப்ப வேண்டும். மற்றொன்று மதுரை கிழக்கு தொகுதியில் உள்ள சில சாதியினருக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைமை முடிவு செய்துள்ளது. தமிழ் நிலப்பரப்பில் ஆயிரம் ஆண்டுகளாக தலைநகராக விளங்கிய பெருமை மதுரைக்கு உண்டு. மதுரை மாநகரம் திட்டமிட்டு கட்டப்பட்ட நகரமாகும். ஆனால் தற்போது பி.டி.ஆர்., மூர்த்தி என 2 அமைச்சர்கள் இருந்தாலும் குப்பை நகரமாக மதுரை காட்சி அளித்து வருகிறது. புறநகர் பகுதிகளில் உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆனால் நகர் பகுதிகளில் சாலைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. திமுக, அதிமுக என இரு ஆட்சிகளிலும் அதே நிலைதான் உள்ளது.

முதலமைச்சருடன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

முதலமைச்சரின் ரோடுஷோவின் போது கூட கழிவுநீர் கால்வாயை மறைத்து வைத்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை நேரில் ஆய்வு செய்து, அதை தூர்வார சொல்லியுள்ளார். இது ஒரு வரவேற்கத்தக்க விஷயமாகும். மதுரை மாநகராட்சி பகுதிகளை மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டாலே படித்தவர்களின் வாக்குகள் கட்டாயம் திமுவுக்கு வரும். கட்டப் பஞ்சாயத்து மற்றும் காவல்துறையை டைட் செய்தாலே, மேலும் வாக்குகள் வரும். இதன் மூலம் திட்டமிட்டபடி பாஜகவின் வளர்ச்சியை தடுத்துவிடலாம். திமுக ஆட்சியில் செய்த திட்டங்களையும்,அதிமுக ஆட்சியில் செய்த திட்டங்களை ஒப்பிட்டு பேசினாலே 8 இடங்கள் வரை கிடைத்துவிடும். அவ்வாறு பணிகளை மேற்கொள்ளாவிட்டால் தற்போது உள்ள இடங்களிலேயே சிலவற்றை இழக்க நேரிடும். என்ன செய்வார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ