Homeசெய்திகள்கட்டுரை1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு சாத்தியமா? - தவெக அரசின் முதல் பட்ஜெட் குறித்து...

1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு சாத்தியமா? – தவெக அரசின் முதல் பட்ஜெட் குறித்து பொருளாதார ஆய்வாளர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் பேட்டி!

-

- Advertisement -

தவெக அரசு தாக்கல் செய்துள்ள முதல் நிதிநிலை அறிக்கை மற்றும் தமிழ்நாட்டின் பொருளாதார எதிர்காலம் குறித்துப் பொருளாதார ஆய்வாளர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனியார் ஊடகத்திற்குப் பேட்டி அளித்துள்ளார்.

ஆனந்த் ஸ்ரீனிவாசன்

we-r-hiring

புதிய திட்டங்களும் தொழில் முதலீடுகளும்!

தவெக அரசு பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் பட்ஜெட்டில் சில முக்கியத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆனந்த் ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டார். குறிப்பாக, பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் திட்டம், டெல்லியைப் போன்ற ‘நவோதயா’ மாதிரிப் பள்ளிகள் தொடங்குவதற்கான அறிவிப்பு, திருப்பூர் மற்றும் பிற தொழில்துறை மையங்களுக்கான வெளிநாட்டுப் பயிற்சி முறைகள் மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் திட்டங்கள் ஆகியவை வரவேற்கத்தக்கவை என்றார்.

மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 ட்ரில்லியன் டாலராக உயர்த்தும் வகையில் 10 தூண்களைக் கொண்ட ‘விஷன் டாக்குமெண்ட்’ மற்றும் செமிகண்டக்டர், ஏ.ஐ. (AI) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களுக்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் உள்ளிட்டவை பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

வருவாய் இழப்பும் கமிட்டி அமைத்தலும்!

மாநிலத்தில் டாஸ்மாக் மற்றும் பத்திரப்பதிவுத் துறைகளில் வர வேண்டிய வருவாய் முழுமையாக வரவில்லை என்பதை அரசு தனது வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் கூறினார். மணல் மற்றும் கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்களின் மூலம் ஏற்படும் வருவாய் கசிவைத் தடுத்து, அரசுக்கு வர வேண்டிய வருவாயை ஈட்டவும், தேவையற்ற செலவினங்களைக் குறைக்கவும் முன்னாள் பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது ஒரு நல்ல தொடக்கம் என்றார். முந்தைய ஆட்சியைக் காட்டிலும் சுமார் 700 கோடி ரூபாய் வரை கடன் குறைவாக வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயம் மற்றும் இளைஞர் நலனுக்கு முக்கியத்துவம்!

சிறு விவசாயிகளுக்கு 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றார். மேலும், விளையாட்டுத் துறைக்கு வரலாறு காணாத வகையில் சுமார் 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதும், பள்ளி மாணவர்களுக்குப் பாரம்பரியமாக வழங்கப்பட்டு வந்த சைக்கிள்களுக்கு மாற்றாகச் ‘ஸ்போர்ட்ஸ் பைக்’, ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வழங்குவது போன்ற அறிவிப்புகள் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

1.5 டிரில்லியன் டாலர் இலக்கை எட்டுவது சாத்தியமா?

ஜிடிபியில் மாநிலத்தின் வருவாய் பங்கு (State’s Own Tax Revenue) தற்போது 6 சதவீதமாக உள்ளதை 8 சதவீதமாக உயர்த்தினால், கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று அரசு கணக்கிட்டுள்ளது. சிங்கிள் விண்டோ முறை மூலம் தொழில் அனுமதிகளை எளிதாக்குவது, ஐ.டி. துறையை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை இரட்டிப்பாக்கக் கோரி வெளியிடப்பட்டுள்ள விஷன் டாக்குமெண்ட் திட்டங்களைச் சரியாக நடைமுறைப்படுத்தினால், மக்களின் வாழ்வாதாரம் உயரும் என ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது பேட்டியில் தெரிவித்தார்.

30% மெஷின்களில் மாபெரும் மோசடி!.. ஸ்டாலின் பெயரையே தூக்கிய கொடூரம் – நீதிமன்றத்தில் கேஸ் போடப் போவதாக திமுக பாய்ச்சல்!

MUST READ