Homeசெய்திகள்கட்டுரைதவெக அரசின் 'கற்பனை' பட்ஜெட்: பொய் மூட்டைகளின் மொத்த தொகுப்பு!

தவெக அரசின் ‘கற்பனை’ பட்ஜெட்: பொய் மூட்டைகளின் மொத்த தொகுப்பு!

-

- Advertisement -

The TVK government's 'imaginary' budget: A complete collection of lies!

என்.கே.மூர்த்தி

தமிழகத்தில் தவெகவின் ஆட்சியில் எதார்த்தத்தை மறந்து தயாரிக்கப்பட்டுள்ள முதல் பட்ஜெட் அறிவிப்புகள் தற்போது அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

we-r-hiring

பெண்களுக்குத் தாலிக்குத் தங்கம், மாணவர்களுக்கு நவீன லேப்டாப், ஆதரவற்ற முதியோர்களுக்கு இல்லங்கள் என அடுத்தடுத்து அள்ளி வீசப்பட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மேடைகளில் பலத்த கைதட்டல்களைப் பெறலாம்; ஆனால், இந்த கவர்ச்சித் திரைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் கோடிக்கணகான ரூபாயின் பித்தலாட்டமும், அதிர்ச்சியூட்டும் கணக்குத் தில்லுமுல்லுகளும் தற்போது புட்டுப் புட்டு வைக்கப்பட்டுள்ளன.

சவரன் தங்கம் தருகிறோம்… ஆனால் நிதி எங்கே?
புதிய பட்ஜெட்டில், திருமணமான பெண்களுக்கு 8 கிராம் தங்கம் (ஒரு பவுன்) மற்றும் ஒரு பட்டுச்சேலை இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், இந்த பிரம்மாண்டமான திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பார்த்தால் தான் மிரண்டு போக வேண்டியுள்ளது – வெறும் ரூ.812 கோடி மட்டுமே! இங்குதான் அசல் மோசடியே அடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமாராக 6 முதல் 7 லட்சம் திருமணங்கள் நடைபெறுகின்றன. இதில் ஒரு திருமணத்திற்கு ஒரு பவுன் நகை மற்றும் பட்டுப்புடவையின் விலையைக் குறைந்தபட்சமாக ரூ.1 லட்சம் என்று கணக்கிட்டாலும் கூட, ஒட்டுமொத்தத் தேவை குறைந்தது ரூ.6,000 முதல் ரூ.7,000 கோடி வரை இருக்கும். இன்றைய தங்கம் மற்றும் பட்டுப் புடவையின் சந்தை விலை நிலவரம் என்னவென்றுகூடத் தெரியாமல், கடலில் பெருங்காயத்தைக் கரைத்தது போல வெறும் ரூ.812 கோடியை ஒதுக்கிவிட்டு, அத்தனை பேருக்கும் வாரி வழங்கப் போவதாகக் கூறுவது சாமானிய மக்களைப் பச்சையாக ஏமாற்றும் தந்திரம் அன்றி வேறென்ன?

கணக்கில் சிக்கிய பச்சைப் பொய்கள்!
அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும், அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கும் எந்தவித நியாயமான தொடர்பும் இல்லாமல், மக்களை ஏமாற்றும் கண்மண் தெரியாத வேலைகள் இதோ:

  • விளையாட்டுத் துறை: சர்வதேச அளவில் நமது குழந்தைகளைப் பயிற்சி பெறச் செய்து சாதனை படைக்கப் போவதாக மேடைகளில் முழங்கிவிட்டு, மாநிலம் முழுவதும் பல லட்சம் இளம் திறமையாளர்கள் உள்ள நிலையில் வெறும் ரூ.5 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏதோ விளம்பரப் பலகைகளுக்கும் பேனர் செலவுகளுக்கும் மட்டுமே உதவும்!
  •  நூலகங்கள் மேம்பாடு: தமிழகம் முழுவதும் 4,600-க்கும் மேற்பட்ட பொது நூலகங்கள் இயங்கி வருகின்றன. அறிவுப் பெட்டகமான இந்த நூலகங்களை நவீனமயமாக்க ஒதுக்கப்பட்ட தொகையோ வெறும் ரூ.10 கோடி மட்டுமே. ஒரு நூலகத்திற்கு மாதத்திற்குச் சில நூறு ரூபாய்களைக் கொடுத்துவிட்டு, எந்தக் மந்திரக் கோலைக் கொண்டு நூலகங்களை டிஜிட்டல் மயமாக மாற்றப் போகிறார்கள்?
  • முதியோர் இல்லங்கள்: மாநிலத்தில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான முதியவர்கள் தனிமைச் சுமையாலும், வறுமையாலும் அவதிப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பான இல்லங்களை நடத்திப் பராமரிக்க வெறும் ரூ.6 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதைவிடப் பெரிய கேலிக்கூத்து இருக்க முடியுமா?

ஏமாற்று வித்தையா அல்லது நிர்வாகத் திவாலா?
பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் தேவைப்படும் நலத்திட்டங்களுக்குச் சொற்பக் கோடிகளை மட்டும் இலக்காக வைத்துவிட்டு, ஏனோதானோவென்று பெரிய பெரிய வார்த்தைகளால் காகிதங்களை நிரப்புவது மக்களை ஏமாற்றும் தந்திர அரசியல் என்றே அரசியல் நோக்கர்கள் பகிரங்கமாகச் சாடுகின்றனர். வெறும் விளம்பரத்துக்காகவும், கேமரா ஃபிளாஷ்களுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த ‘கற்பனை பட்ஜெட்’ எந்தவித நிர்வாகத் திறமையும் இல்லாமல் வெறும் வெற்றுப் பேச்சாகவே காற்றோடு கரைந்துபோகும். சாமானிய மக்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் இந்த அப்பட்டமான ஏமாற்று நாடகம், தவெகவின் நிர்வாக திவால் நிலையைத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது!

1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு சாத்தியமா? – தவெக அரசின் முதல் பட்ஜெட் குறித்து பொருளாதார ஆய்வாளர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் பேட்டி!

MUST READ