spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைராமதாசுக்கு இரண்டாவது மனைவி? பிரபல நாளிதழில் வெளியான புகைப்படம்!

ராமதாசுக்கு இரண்டாவது மனைவி? பிரபல நாளிதழில் வெளியான புகைப்படம்!

-

- Advertisement -

மருத்துவர் ராமதாஸ் தொடர்ச்சியாக அன்புமணி மீது விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், தற்போது ராமதாசின் பிம்பத்தை உடைக்கும் விதமாக அவருடைய இரண்டாவது மனைவி உடனான திருமண புகைப்படத்தை அன்புமணி ஆதரவாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மருத்துவர் ராமதாசின் 2வது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் வெளியில் கசிந்துள்ளதன் பின்னணி குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- மருத்துவர் ராமதாசின் இரண்டாவது திருமணம் சமூக ஊடகங்களில் விவாத பொருள் ஆகி உள்ளது. இது தொடர்பான புகைப்படம் பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றில் வாழ்த்துச் செய்தியாக வெளியாகி உள்ளது. இதனை பாமகவை சேர்ந்த மிக முக்கியமான நபர் ஒருவர் இந்த புகைப்படத்தை கொடுத்து, அந்த நாளிதழ் ஒரு செய்தியாக வெளியிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பின்னால் உள்ள அரசியல் காரணங்கள் குறித்து ராமதாசின் வார்த்தைகளிலேயே பதில் சொல்வது என்றால்? ஒட்டுக்கேட்பு கருவியை யார் வைத்தார்களோ? அவர்கள் தரப்பில் இருந்துதான் இந்த புகைப்படம் வெளிப்பட்டிருக்கிறது. பாமக தற்போது இரண்டு அணியாக மாறிவிட்டது. மருத்துவர் ராமதாஸ், அன்புமணி தலைமைப் பண்பு அற்றவர் என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக முன்வைத்து வந்தார். தான் சமூகநீதி கட்சியாக பாமகவை உருவாக்கியதாகவும், அது ரியல் எஸ்டேட் செய்பவர்களின் கட்சியாக மாறிவிட்டதாக வெளிப்படையாக ராமதாஸ்  குற்றச் சாட்டுகளை முன்வைத்தார். ஆனால் அதற்கு அன்புமணி பதில் அளிக்கவில்லை. அதற்கு நேரடியாக பதில் அளிக்காமல் தந்தையர் தினத்தில் ராமதாசிடம் மன்னிப்புக் கேட்பதாக கூறினார். ஆனால் அவர்களுக்கு இடையிலான யுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில், மருத்துவர் ராமதாசுக்கு மனைவி அல்லாத துணைவி ஒருவர் இருக்கிறார் என்கிற விஷயத்தை, ராமதாசோடு யாரெல்லாம் முரண்பட்டு வெளியே வந்தார்களோ அவர்கள் தான் இதை பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, ராமதாஸ் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரை கொச்சைப்படுத்தும் விதமாக பேசுவதாக பதில் அளிக்கப்பட்டது. மருத்துவர் ராமதாஸ் காதலுக்கு எதிரானவர் என்கிற ஒரு பிம்பத்தை கட்டி எழுப்பி இருந்தார்கள். ஆனால் உண்மையில் அவர் காதலுக்கு ஆதரவாகவே இருந்துள்ளார். 50 வருடங்களுக்கு முன்னதாகவே மருத்துவர் ராமதாஸ், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், இந்த விவகாரத்தை அன்புமணியின் ஆதரவாளர்கள் தான் வெளி உலகிற்கு கொண்டு வந்துள்ளனர். திராவிட இயக்க தலைவர்கள், கலைஞருக்கு இரண்டு மனைவிகள் உள்ளது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் மருத்துவர் விவகாரம் மிகவும் ரகசியமாக இருந்து வந்துள்ளது. ஒரு தலைவருடைய அந்தரங்கத்தை துருவி துருவி விசாரிப்பது. அடுத்தவர்களின் படுக்கை அறையை எட்டிப்பார்ப்பது போன்றவை யாருக்கு பொருந்தும் என்கிற கேள்வி உள்ளது?

kalaignar

யாரை இவர்கள் புனிதப்படுத்துகிறார்கள்?, யாரை கொச்சைப்படுத்துகிறார்கள்? என்று பார்த்தோம் என்றால் அது திராவிட இயக்க தலைவர்கள் தான். எம்ஜிஆர் – ஜானகி திருமணம் குறித்து எங்காவது பொதுவெளியில் பேசுவார்களா? ஆனால் அவர்க்ளுக்கு புனிதத்தன்மை கட்டமைக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் இருந்து ஒரு தலைவன் உயர்ந்து வருகிறபோது உளவியலாக ஒப்புக்கொள்ள முடியாமல் அவர் மீது அவதூறுகளை பரப்பினர். கவிஞர் க.மு.ஷெரீப், கலைஞரை சேலம் மாடர்ன் தியேட்டருக்கு அழைத்துச்சென்று, மாடர்ன் தியேட்டர் சுந்தரத்திடம் இவர் மிகச்சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், இவரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். சேலம் மாடர்ன் தியேட்டர்சில் பணிபுரிந்த கலைஞர், மிகப்பெரிய வெற்றிப்படங்களுக்கு கதை, வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார். அதில் சம்பாதித்து விட்டு தான் அவர் சென்னைக்கு வந்து குடியேறினார். ஆனால் இன்று வரை எதிர்க்கட்சிகள் கலைஞர் குறித்து என்ன சொல்கிறார்கள்? கலைஞர், குறித்த அந்த விமர்சன வாசகத்தை துக்ளக் பத்திரிகைதான் உருவாக்கியது. பார்ப்பனர்களின் கைகளில் ஊடகம் இருந்தபோது உற்பத்தி செய்யப்பட்ட வார்த்தைகள் அவை. பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகள் தான் பரவலாகி எல்லோராலும் நம்பப்படுகிறது.  விஞ்ஞான முறையில் ஊழல் செய்ததாக சொல்வார்கள். ஆனால் உண்மையிலேயே ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப் பட்டவர்கள் குறித்து பேசுவது கிடையாது.

சுசிலா விவகாரம் என்பது மருத்துவர் ராமதாசுக்கு, ரகசிய துணைவியாக இருந்தார் என்பது அல்ல. அவர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.  எப்படி ஜெயலிதாவுக்கு சசிகலா ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தினார்களோ? அதுபோல பாமகவில் யார் பதவியில் இருக்க வேண்டும்? இருக்கக்கூடாது என்று தீர்மானிக்கக்கூடிய சக்தியாக சுசிலா திகழ்ந்தார் என்பதுதான் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. பாமகவில் யாருடைய கை ஓங்க வேண்டும் என்று உள்ளுக்குள் ஒரு போர் நடைபெற்று, வேறு வழியில்லாமல் அது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாமகவில் தொடக்க காலத்தில் இருந்தே யாருக்கு பதவி வழங்கப்பட வேண்டும். யார் கட்சியில் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கக்கூடிய இடத்தில் சுசிலா இருந்தார் என்று பாமகவினர் சொல்கின்றனர். இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது அல்லவா? அரசியல் ரீதியான பிரச்சினைகளை தாண்டி குடும்ப பிரச்சினைகளை முன்வைப்பதன் மூலம் எதை அன்புமணி நிருவ நினைக்கிறார் என்றால்?  மருத்துவர் ராமதாசின் பிம்பத்தை சேதப்படுத்துவதுதான். ஏனென்றால் அன்புமணி குறித்து தொடர்ச்சியாக ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகளால் அவருடைய இமேஜ் காலியானது. இந்த நிலையில், மருத்துவர் ராமதாசின் இமேஜை காலி செய்வதற்கான எதிர்வினைதான் இது.

முன்னதாக பேசிய அன்புமணி, ராமதாசுக்கு உடல்நல குறைவு உள்ளது. அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டிருக்கிறது என்று அவருடைய உடல்நல பிரச்சினைகளை எல்லாம் தொண்டர்களிடம் சொன்னார். இதன் மூலம் அவருக்கு வயதாகிவிட்டது. இனி எல்லாம் நான்தான். அதனால் ராமதாசை நம்பி போகாதீர்கள் என்று சொன்னார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக உடன் செல்ல மருத்துவர் ராமதாசும், பாஜக கூட்டணிக்கு செல்வது என அன்புமணியும் பேசி இருகட்சிகளிடமும் தேர்தல் நிதி வாங்கிவிட்டார்கள். கூட்டணிக்கு செல்லும் கட்சி மட்டுமின்றி, கூட்டணி செல்லாத கட்சியிடமும் அவர்கள் தேர்தல் நிதியை வாங்கினார்கள். இரு பக்கமும் நிதி வாங்குகிற வாய்ப்பு உள்ளதை அவர்கள் கடந்த தேர்தலில் கண்டுபிடித்துவிட்டார்கள். அதனால் இரண்டு அணியாக இருப்பதில் அவர்களுக்கு லாபம்தான். நட்டம் இல்லை. அவர்களை சமூகநீதி போராளி என்று அவர்களை நம்பி பின்தொடர்கிற மக்களுக்கு தான் நட்டம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ