spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஉளறிய எடப்பாடி! அமித்ஷா மிரட்டல்! டெல்லி போன கூவத்தூர் பைல்ஸ்! முட்டுச்சந்தில் அண்ணாமலை!

உளறிய எடப்பாடி! அமித்ஷா மிரட்டல்! டெல்லி போன கூவத்தூர் பைல்ஸ்! முட்டுச்சந்தில் அண்ணாமலை!

-

- Advertisement -

சீமான், விஜய் போன்றவர்களை பார்த்து பயந்துதான் எடப்பாடி பழனிசாமி பாஜக உடன் கூட்டணி அமைத்தார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியதன் பின்னணி குறித்தும், சந்திப்பின்போது பேசப்பட்ட விஷயங்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- எடப்பாடி பழனிசாமி கொடுத்த கார் கிடைக்காததால் கிடைத்த காரில் சென்றதாகவும், கிடைத்த காரில் நான் ஏறியதை பெரிதாக்கி உங்களுக்கு கொடுத்த கேள்வியை நீங்கள் கேட்கிறீர்கள் என்று கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு மொழி பெயர்ப்பாளர் இருந்திருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியுடன் வந்தவர் ஒரு தொழிலதிபர், அந்த காரே ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது என்று சொல்கிறார்கள். இது விவாதமாக மாறக்கூடாது என்பதற்காக அதிமுகவும் இந்த விவகாரத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமித்ஷாவை எடப்பாடியும், அவருடைய மகனும் சென்று சந்தித்ததாக கூறப்படுகிறது.

மிதுன் பழனிசாமி, அரசியலில் அனுபவம் இல்லாதவர். ஒன்றிய அளவில் உள்ளவர்களுக்கு எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாக சொல்லி பணம் வாங்கி கொண்டிருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. அவரை அமித்ஷாவிடம் அறிமுகம் செய்து வைத்து என்ன ஆகப் போகிறது. இதன் காரணமாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் அதிருப்தி அடைகிறார்கள். இந்த சந்திப்புக்கு பிறகு அமித்ஷாவிடம் ஒப்பந்தங்களை பெற்றுத்தரக் கோரி பேரம் பேசப்பட்டதாகவும் சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி செய்வது அனைத்தும் மர்மமாக இருப்பதால்தான் பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்பு வலுக்கிறது.

அரசியல் தலைவர்கள் என்றால் அவர்களின் பின்னால் செய்தியாளர்கள் போகத்தான் செய்வார்கள். அமித்ஷாவை சந்தித்த பின்னர் வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி, செய்தியாளரை சந்தித்து எதாவது சொல்லி இருந்தால் பிரச்சினை இல்லை. எதற்காக அவர் மறைந்து மறைந்து போக வேண்டும். கர்சிப்பை வைத்து முகத்தை மறைக்க வேண்டும். ஏசி வாகனத்தில் செல்கிறபோது ஏன் வியர்க்கிறது. ஒருவேளை யாராவது திட்டினாலோ, அல்லது மிரட்டினாலோதான் வியர்க்கும். அப்படி பார்த்தால் அதுவும் உண்மைதானே. எடப்பாடியாரின் வாழ்க்கை கேள்விக்குறியாக தான் போகிறது. எடப்பாடி பழனிசாமி ஒரு ஒப்பந்ததாரர். அவர் என்றைக்கு விவசாயம் பார்த்தார். காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் வகித்த முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி 4.5 ஆண்டுகள் வகித்துள்ளார். ஆனால் நெடுஞ்செழியனால் கூட முதலமைச்சர் ஆக முடியவில்லை. அப்படி இருந்தும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தது அதிர்ஷ்டம்தான்.

பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு ஜூன் 27க்கு ஒத்திவைப்பு

டிடிவி தினகரன், எல்லோரிடமும் கையெழுத்து வாங்கிவிட்டு தன்னுடைய பெயரை அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடி சொன்னதாக கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் செம்மலை சுவர் ஏறி குதித்து சென்றார் என்று சொல்கிறார்கள். ஆனால் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கிறார். அவருக்கு இன்று வரை எம்எல்ஏ, எம்.பி. பதவி வழங்கப்படவில்லை. 2011ல் ஜெயலலிதாவால் தினகரன் நீக்கப்பட்டதாக சொல்கிற எடப்பாடி பழனிசாமி, அவருக்காக தான் ஆர்.கே.நகர் தேர்தலில் பிரச்சாரம் செய்தார். சசிகலா பதவி கொடுத்தபோது அவருக்கு தெரியாதா?

இந்நிலையில், சீமான், தனக்கு பயந்துதான் எடப்பாடி பழனிசாமி பாஜக உடன் கூட்டணி வைத்தார் என்று சொல்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு அத்தகைய பயம் உள்ளது. விஜய் 7 சதவீதம் வாக்குகள்,  சீமான் ஒரு 7 சதவிதம் இதை சேர்த்தால் 15 ஆகிவிட்டது. எடப்பாடி இம்முறை 14 சதவீத வாக்குகள் தான் வாங்குவார். இப்படி வாக்குகளை பிரித்து திமுகவை அபார வெற்றி பெற வைக்கப் போகிறார்கள். வரலாற்றில் இல்லாத வகையில் 170 -180 இடங்களை பெற வைக்கப் போகிறார்கள். அதற்கான வேலைகளை எடப்பாடியே செய்துவிடுவார். விஜய், சீமான் போன்றவர்களும் ஒரு புறம் செய்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ