Homeசெய்திகள்கட்டுரைநீட் தேர்வு முறையால் 124 மாணவர்கள் பலி; நாடாளுமன்றத்தில் மத்திய அரசை வச்சி செய்த திருச்சி...

நீட் தேர்வு முறையால் 124 மாணவர்கள் பலி; நாடாளுமன்றத்தில் மத்திய அரசை வச்சி செய்த திருச்சி சிவா!

-

- Advertisement -

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது நீட் தேர்வு முறை மற்றும் புதிய மசோதா குறித்து திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் திருச்சி சிவா ஆவேசமாகவும், கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து உரையாற்றினார்.

திருச்சி சிவா

we-r-hiring

நீட் தேர்வும் மாணவர்களின் உயிர்ப்பலியும்

நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பாகப் பேசுகையில், நீட் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் இதுவரை தமிழகத்தில் அனிதா தொடங்கி எண்ணற்ற மாணவர்கள் மன உளைச்சல் மற்றும் தற்கொலை காரணமாகத் தங்கள் உயிரை இழந்துள்ளனர் என்று திருச்சி சிவா குற்றம்சாட்டினார். 2026-ஆம் ஆண்டு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பிறகும் கூட பல மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்றும், இதற்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

தனிநபர் தேர்வு முறையும் வணிகமயமாக்கலும்

இந்தியாவின் பல்வேறு கலாச்சார, சமூக மற்றும் பொருளாதாரப் பின்னணி கொண்ட மாணவர்களுக்கு ஒரே வகையான தேர்வு முறை (One size fits for all) எப்போதுமே பொருந்தாது என்று வாதிட்ட அவர், நீட் தேர்வு வந்த பிறகு ஏழை, கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவு சிதைந்துவிட்டதாகத் தெரிவித்தார். கோச்சிங் சென்டர்கள் மற்றும் பிரைவேட் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையால் ஏழை எளிய மாணவர்களால் மருத்துவக் கல்வி கற்பது எட்டாக்கனியாகிவிட்டதாகவும், ஒட்டுமொத்த மருத்துவக் கல்வியும் வணிகமயமாக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் சாடினார்.

கடுமையான சட்டங்கள் தீர்வாகாது

வினாத்தாள் கசிவைத் தடுப்பதாகக் கூறி புதிய கடுமையான சட்டங்களைக் கொண்டுவருவதால் மட்டும் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடாது. இதுபோன்ற நடவடிக்கைகள் மாணவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது என்றும், முறைகேடுகளைத் தடுத்து மாணவர்களின் எதிர்காலத்தை காக்க ஒரே வழி நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்வது மட்டும்தான் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

மாணவர் போராட்டமும் காவல்துறையின் அடக்குமுறையும்

மாணவர்களின் நியாயமான போராட்டங்களைச் சந்திக்கத் தயாராக இல்லாத அரசு, அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும், தடியடியையும், பெல்லட் குண்டுகளையும் ஏவி அடக்குமுறையைக் கையாண்டது கண்டிக்கத்தக்கது என்றார். மணிப்பூர் விவகாரத்தையோ அல்லது விவசாயிகளின் போராட்டத்தையோ கண்டுகொள்ளாத இந்த அரசு, மாணவர்களின் ஒரு மாதப் போராட்டத்தின் மூலமே மசிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றும், மாணவர்களின் பலத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார்.

திமுகவின் உறுதியான நிலைப்பாடு

கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டும் என்பதே திமுகவின் அடிப்படைக் கொள்கை. நீட் தேர்வை எப்போதுமே திமுக எதிர்க்கிறது என்றும், கடுமையான சட்டங்களை இயற்றுவதை விட்டுவிட்டு நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்குத் தீவிரமாகக் கொண்டுசெல்வதாகவும் அவர் தனது உரையை நிறைவு செய்தார்.

மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

MUST READ