Homeசெய்திகள்கட்டுரைகொளத்தூர் தொகுதி ஈவிஎம் சோதனை ஒரு டெக்னிக்கல் ப்ராடு; தேர்தல் ஆணையம் மக்களை ஏமாற்றுகிறது: டாக்டர்...

கொளத்தூர் தொகுதி ஈவிஎம் சோதனை ஒரு டெக்னிக்கல் ப்ராடு; தேர்தல் ஆணையம் மக்களை ஏமாற்றுகிறது: டாக்டர் பொன்ராஜ் பேட்டி

-

- Advertisement -

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகரும், மூத்த அரசியல் ஆய்வாளருமான டாக்டர் பொன்ராஜ், மார்ஷல் மீடியா யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், கொளத்தூர் தொகுதியில் நடந்துவரும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) சரிபார்ப்புப் பணிகள் குறித்து அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

டாக்டர் பொன்ராஜ் பேட்டி

we-r-hiring

கொளத்தூர் தொகுதி மறுமதிப்பீடும் விவிபேட் சீட்டுகள் விவகாரமும்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்த கொளத்தூர் தொகுதியில், குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் உள்ள இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தச் சோதனையின் மூலம் தேர்தல் முடிவுகளில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படாது என்று குறிப்பிட்ட டாக்டர் பொன்ராஜ், இந்த முழு நடைமுறையும் தேர்தல் ஆணையம் அரங்கேற்றும் ஒரு “டெக்னிக்கல் ப்ராடு” (Technical Fraud) மற்றும் மக்களை ஏமாற்றும் செயல் என்றும் வர்ணித்தார்.

உண்மையான மற்றும் நேர்மையான தேர்தல் முடிவை அறிய வேண்டுமென்றால், விவிபேட் இயந்திரங்களில் பதிவான அனைத்துச் சீட்டுகளையும் (100%) முழுமையாக எண்ணி, ஈவிஎம் இயந்திர முடிவுகளுடன் ஒப்பிட்டு அறிவிக்க வேண்டும் என்பதே சரியான முறை என்றார். ஆனால், அதை விடுத்து விட்டு கட்டுப்பாட்டு நினைவகத்தை (Control Memory) மட்டும் வைத்து மீண்டும் சோதனை செய்வது வாக்காளர்களைக் குழப்பும் டெக்னிக்கல் நாடகம் என்று அவர் சாடினார்.

தொழில்நுட்ப மோசடி விளக்கமும் பாஜக பிராக்சி ஆட்சி குற்றச்சாட்டமும்:

ஒரு பொறியியலாளராக (Engineer) தான் இதற்கான தொழில்நுட்ப விளக்கத்தைக் கொடுப்பதாகத் தெரிவித்த அவர், தேர்தல் தேதிக்குச் சில நாட்களுக்கு முன்பு ‘சிம்பல் லோடிங்’ (Symbol Loading) செய்யப்படும்போதே, குறிப்பிட்ட சின்னத்திற்கு விழும் வாக்குகளுடன் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளைத் தானாக மாற்றிக்கொள்ளும் வகையில் புரோகிராமிங் செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போதைய சோதனையின் போது, முதல் கட்டமாக பழைய ரிசல்ட்டையே அப்படியே காட்டிவிட்டு, அடுத்த கட்டமாக இயந்திரங்களை அழித்துவிட்டு (Erase) மார்க் போல் (Mock Poll) நடத்துவது போன்ற கண்துடைப்பு வேலைகள் மூலம் ஈவிஎம் மீது மக்களுக்குச் சான்றிதழ் வாங்கித் தரும் முயற்சி நடப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டில் தற்போதைய ஆட்சி பாஜகவின் பிராக்சி (Proxy) அரசாகச் செயல்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் அரசியல் கட்சிகளை பலவீனப்படுத்திவிட்டு ஒரு குழப்பமான கூட்டணி அரைக் கொண்டுவர இதுபோன்ற உத்திகள் பயன்படுத்தப்படுவதாகவும் பொன்ராஜ் தெரிவித்தார்.

ஈவிஎம் இயந்திரங்கள் மீதான சந்தேகங்களை முழுமையாகத் தீர்க்க தேர்தல் ஆணையம் துணிச்சலாக 100% விவிபேட் சீட்டுகளை எண்ணி வெளியிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

MUST READ