Homeசெய்திகள்ஆன்மீகம்ஆனி மாத ராசி பலன் 2025: குரு,புதன் சூரியன் கூட்டணி....4 ராசிக்காரர்களுக்கு திடீர் யோகம்!

ஆனி மாத ராசி பலன் 2025: குரு,புதன் சூரியன் கூட்டணி….4 ராசிக்காரர்களுக்கு திடீர் யோகம்!

-

- Advertisement -

ஆனி மாத ராசி பலன் 2025: குரு,புதன் சூரியன் கூட்டணி….4 ராசிக்காரர்களுக்கு திடீர் யோகம்!

சென்னை: நவ கிரகங்களில் அரச கிரகமான சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆனி மாதம். சூரியனின் வடதிசைப் பயணக் காலமான உத்திராயண காலத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. அதாவது, தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதினைக் கொண்ட மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது என்ற கருத்தும் வழக்கில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆனி மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: அரச கிரகமான சூரியன் மூன்றாமிடத்தில் பயணம் செய்யும் இந்த காலத்தில் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும் வியாபாரம் விருத்தியாகும். உங்கள் பேச்சில் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும் பேச்சிலேயே பலரையும் கவர்வீர்கள். நல்ல செய்தி தேடி வரும். தொட்டது துலங்கும் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். பண விசயத்தில் நண்பர்கள், வாழ்க்கை துணையின் உதவி கிடைக்கும்

ரிஷபம்: வேலையில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் சம்பள உயர்வு கிடைக்கும். பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும். உங்களின் புத்தி கூர்மை அதிகரிக்கும் சமயோசிதமாக பேசி காரியத்தை சாதிப்பீர்கள். தொழில் உத்தியோகம் சிறப்படையும் எடுக்கும் காரியங்களெல்லாம் வெற்றியடையும். குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் பணிகளுக்கு நன்கொடை கொடுப்பீர்கள். ராகு கேது உங்களுக்கு அற்புத பலன்களை தரப்போகிறது.

மிதுனம்: வேலையில் இருப்பவர்களுக்கு தலைமைப் பதவி தேடி வரும். அப்பாவின் உதவி கிடைக்கும். வீடு மனை வாகனம் வகையில் பண வரவு அதிகரிக்கும். பேச்சில் இனிமை அதிகரிக்கும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். சில வாரங்களுக்கு ஷேர்மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும். முன்னோர்கள் சொத்திலிருந்து பண வரவு அதிகரிக்கும்.

கடகம்: ஆனி மாதத்தில் தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் அதிகரிக்கும். செய்யும் தொழிலில் கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் தொழில் நிமித்தமாக வெளியூர் செல்வீர்கள். தொழில் உத்தியோகம் சிறப்படையும். பண வரவு வந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் ஸ்தான ராகுவால் செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும்.

MUST READ