Homeசெய்திகள்ஆன்மீகம்அரியலூர் அருகே அழிசுக்குடி தீப்பாச்சி அம்மன் பெரியநாயகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள்...

அரியலூர் அருகே அழிசுக்குடி தீப்பாச்சி அம்மன் பெரியநாயகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

-

- Advertisement -

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே அழிசுக்குடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு தீப்பாச்சி அம்மன் பெரியநாயகி அம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.அரியலூர் அருகே அழிசுக்குடி தீப்பாச்சி அம்மன் பெரியநாயகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இதில் அழிசுக்குடி, சோழங்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

அழிசுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த ஊர் முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் முடிவு செய்தனர். அதன்படி கோயில் கட்டுமானப் பணிகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதையடுத்து கடந்த நவம்பர் 26ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் மங்கள இசையுடன் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் தொடங்கின. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

நவம்பர் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால பூஜை தொடங்கி, விசேஷ திரவிய ஹோமங்கள், கோ தரிசனம் உள்ளிட்ட பல்வேறு யாகசாலை வழிபாடுகள் நடைபெற்றன.

பின்னர் குருக்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை எடுத்துக்கொண்டு மேளதாளத்துடன் கோயில் வளாகத்தைச் சுற்றி வந்தனர். இதனைத் தொடர்ந்து வானவேடிக்கைகள் முழங்க, கோயில் விமானக் கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் அழிசுக்குடி, சோழங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு அம்மனைத் தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவையொட்டி கிராமமே பக்தி உற்சாகத்தில் களைகட்டியது.

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் தரிசனம்: 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்!

MUST READ