12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் கீழே தரப்பட்டுள்ளது.

மேஷம்:
இன்று சில சங்கடங்களும் எதிர்பாராத செலவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்த்து, உங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்:
மிகவும் நிம்மதியான, லாபகரமான நாளாக அமையும். வீடு, நிலம் தொடர்பான விஷயங்களில் சாதகமான சூழல் உருவாகும். பொறியியல் மற்றும் அறிவியல் துறையினருக்கு இருந்த சிக்கல்கள் தீரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9
மிதுனம்:
புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்பு நன்கு ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் வீண் விவாதங்களைத் தவிர்க்கலாம்.
கடகம்:
மனதில் இருந்த தேவையற்ற கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து, பணிகளை விரைவாக முடிப்பீர்கள்.
சிம்மம்:
மிகவும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும் நாள். பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
கன்னி:
அரசாங்கக் காரியங்களில் அனுகூலமான சூழல் ஏற்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். தம்பதிகளிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் சில வீண் செலவுகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
துலாம்:
பொருளாதார நிலை மேம்பட்டு அந்தஸ்து உயரும். வியாபாரிகள் மற்றும் கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
விருச்சிகம்:
உடல்நலம் சிறப்பாக இருக்கும். மன உறுதியுடன் செயல்பட்டு, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள முக்கியப் பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
தனுசு:
புதிய வாய்ப்புகள் தேடி வரும் நாளாக அமையும். ஆன்மிகச் சிந்தனைகள் மேலோங்கும். பெரியவர்களின் ஆலோசனைகள் உங்கள் செயல்பாடுகளுக்கு வழிகாட்டியாக இருக்கும்.
மகரம்:
நன்மைகளும் சில சங்கடங்களும் கலந்த நாளாக இருக்கும். தொழில் மேன்மை தொடரும். வீடு, நிலம் தொடர்பான சிக்கல்களைச் சமாதானமான முறையில் தீர்த்துக்கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3
கும்பம்:
நற்பலன்கள் அதிகரித்து, எதிலும் சிறிய அளவிலான ஆதாயம் கிடைக்கும். முன்விரோதங்களால் ஏற்படும் சங்கடங்களைச் சமாளிக்கும் வழிகள் புலப்படும். இயந்திரங்களைக் கையாளும்போது கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9
மீனம்:
உங்களிடம் பணிபுரிபவர்களிடம் அன்பாகவும் அனுசரணையாகவும் நடந்துகொள்ளுங்கள். கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் பெற்றோர் வழியில் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3
