Homeசெய்திகள்ஆன்மீகம்திருவண்ணாமலை மகா தீப தரிசனத்திற்கு கட்டண முறை ரத்து – 3,000 பக்தர்களுக்கு இலவச அனுமதி;...

திருவண்ணாமலை மகா தீப தரிசனத்திற்கு கட்டண முறை ரத்து – 3,000 பக்தர்களுக்கு இலவச அனுமதி; இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு!

-

- Advertisement -

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்திற்கான கட்டண நுழைவுச் சீட்டு முறை இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, 3,000 பக்தர்களுக்கு முற்றிலும் இலவசமாக நுழைவுச் சீட்டுகள் வழங்க இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது.திருவண்ணாமலை மகா தீப தரிசனத்திற்கு கட்டண முறை ரத்து – 3,000 பக்தர்களுக்கு இலவச அனுமதி; இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு!

இதன்படி, பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்திற்கான இலவச நுழைவுச் சீட்டுகளைப் பெற விரும்பும் பக்தர்கள், இன்று (நவம்பர் 18) காலை 11 மணி முதல் வரும் 20-ஆம் தேதி மாலை 3 மணி வரை கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://annamalaiyar.hrce.tn.gov.in என்ற முகவரியில் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

மொத்தம் 3,000 நுழைவுச் சீட்டுகளில், பரணி தீப தரிசனத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்களுக்கு 500 சீட்டுகளும், பிற மாவட்ட பக்தர்களுக்கு 500 சீட்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், மகா தீப தரிசனத்திற்கு உள்ளூர் பக்தர்களுக்கு 1,000 சீட்டுகளும், பிற மாவட்ட பக்தர்களுக்கு 1,000 சீட்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்தவர்களில் இருந்து வரும் 20-ஆம் தேதி மாலை 4 மணியளவில் கணினி மூலம் தானியங்கி குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மின்னணு நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் நவம்பர் 24-ஆம் தேதி கோயில் நுழைவுவாயிலில் மின்னணு நுழைவுச் சீட்டைக் காண்பித்து, ஆதார் அடையாளச் சான்று சரிபார்ப்புக்குப் பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

பரணி தீபத்திற்கு முன்பதிவு செய்பவர்கள் மகா தீபத்திற்கு முன்பதிவு செய்ய முடியாது. அதேபோல், மகா தீபத்திற்கு முன்பதிவு செய்பவர்களும் பரணி தீபத்திற்கு முன்பதிவு செய்ய இயலாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் திருக்கோவிலில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்ற 1008 சங்காபிஷேகம்…

MUST READ