

தினத்தந்தி
1.மேஷம்
முயற்சி கைகூடும் நாள். காலை நேரம் காதினிக்கும் செய்தி வந்து சேரும். கடல் தாண்டி சென்று பணி புரிவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். பணப்பற்றாக்குறை அகலும்.
2. ரிஷபம்
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். வருமானம் திருப்தி தரும். அலைபேசி வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
3. மிதுனம்
கடன்சுமை குறையும் நாள். பிள்ளைகள் வழியில் சுபவிரயம் உண்டு. நல்லவர்களின் தொடர்பு கிடைத்து மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். உடல்நலம் சீராகும்.
4. கடகம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். இடம், பூமி வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும்.
5. சிம்மம் – இன்றைய ராசி பலன்கள்
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் பக்கபலமாக இருப்பர். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை கூடும்.
6. கன்னி
எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். செல்லும் இடங்களில் செல்வாக்கு மேலோங்கும். மாமன், மைத்துனர் வழியில் மனமினிக்கும் செய்திகள் வந்து சேரும். உடன் இருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
7.துலாம்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் செயல்பாடுகளில் குறை காண்பர். வீடு வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.
8.விருச்சகம்
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்தி தரும். புகழ் கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.
9. தனுசு
அயல்நாட்டு முயற்சியில் அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு கூடும். தொழில் கூட்டாளிகளிடம் எற்பட்ட குழப்பங்கள் அகலும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும்.
10. மகரம்
செல்வ வளம் பெருகும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைவதற்கான சந்தர்ப்பம் கைகூடி வரும். தொழிலை விரிவுபடுத்தலாமா என்று சிந்திப்பீர்கள். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள்.
11. கும்பம்
எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் வீண் பழிகள் ஏற்படும். பிறருக்காக பணப்பொறுப்பு சொல்வதன் மூலம் பிரச்சினைகள் உருவாகும்.
12. மீனம்
வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர்கள் உங்கள் சொல்லிற்கு மதிப்புக் கொடுப்பர்.
தின மலர்
1. மேஷம்:
அசுவினி : உங்கள் முயற்சி பலிதமாகும். தடைகளைக் கடந்து சாதிப்பீர்கள்.
பரணி : வியாபாரத்தில் ஏற்பட்ட தடை அகலும்.புதிய முயற்சியில் அனுகூலம் ஏற்படும்.
கார்த்திகை 1 : குடும்பத்தில் ஒருவரின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். நணபர்களால் நன்மை உண்டு.
2.ரிஷபம்:
கார்த்திகை 2, 3, 4 : பிள்ளைகளின் வளர்ச்சி உங்களுக்கு பெருமையை உண்டாக்கும். மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : நேற்றைய செய்கையால் லாபம் உண்டாகும். உங்களால் குடும்பத்திற்கு பெருமை ஏற்படும்.
மிருகசீரிடம் 1, 2 : மற்றவரின் பலம் பலவீனம் அறிந்து அதற்கேற்ப செயல்பட்டுவீர்கள்.
3. மிதுனம்:
மிருகசீரிடம் 3,4 : நேற்று ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
திருவாதிரை : உங்கள் விருப்பப்படி நீங்கள் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3 : பணியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். ஆதரவு பெருகும் நாள்.
4. கடகம்:
புனர்பூசம் 4 : தொழிலில் இருந்து வந்த தடை விலகும். பொருளாதார நிலை உயரும் நாள்.
பூசம் : சிந்தித்து செயல்படுவதால் நீங்கள் ஈடுபடும் செயல் முன்னேற்றம் அடையும்.
ஆயில்யம் : நீங்கள் எதிர்பார்த்த சுபத்தகவல் வந்து சேரும். பணப்பரிவர்த்தனை சீராகும்.
5. சிம்மம்:
மகம் : பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை சரியாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும் நாள்.
பூரம் : தொழிலில் உண்டான போட்டியை சரி செய்வீர்கள். உங்கள் முயற்சிக்கு ஏற்ப பலனுண்டு.
உத்திரம் 1 : ஆரோக்யம் சீராகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். நிதிநிலை உயரும்.
6. கன்னி:
உத்திரம் 2, 3, 4 : பணி புரியும் இடத்தில் எதிர்பார்த்த நற்பலனை பெறுவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.
அஸ்தம் : முயற்சியில் இருந்த தடை விலகும். குலதெய்வ அருளால் நினைத்தது நிறைவேறும்.
சித்திரை 1, 2 : தொழிலை விரிவு செய்யும் முயற்சி முன்னேற்றம் காண்பீர்கள். நிதிநிலை உயரும்.
7. துலாம்:
சித்திரை 3, 4 : குடும்பச்செலவுக்கு பணத்தேவை அதிகரிக்கும். போராடி சமாளிப்பீர்கள்.
சுவாதி : மனதில் குழப்பம் அதிகரிக்கும். உங்கள் கவனக் குறைவால் செலவுகளை சந்திப்பீர்கள்.
விசாகம் 1, 2, 3 : நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். கூட்டுத்தொழிலில் சங்கடத்தை சந்திப்பீர்கள்.
8. விருச்சிகம்:
விசாகம் 4 : இழுபறியாக இருந்த செயல் இன்று நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
அனுஷம் : பிரபலங்களின் துணையுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சிக்கல் தீரும்.
கேட்டை : நீங்கள் விரும்பியதை அடைவீர்கள். உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும் நாள்.
9. தனுசு:
மூலம் : தொழிலில் உண்டான நஷ்டத்திற்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் அணுகுமுறையில் லாபம் ஏற்படும்.
பூராடம் : வேலை தேடி வந்தவர்களின் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். மனம் சோர்வடையும்.
உத்திராடம் 1 : பணிபுரியும் இடத்தில் ஒரு சிலருக்கு விரும்பிய இடமாற்றம் உண்டாகும்.
10. மகரம்:
உத்திராடம் 2, 3, 4 : தடைகளை விலக்கி உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். நிதிநிலை உயரும்.
திருவோணம் : திட்டமிட்டபடி செயல்படுவீர்கள். நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும்.
அவிட்டம் 1, 2 : அலுவலகத்தில் ஏற்பட்ட சங்கடமான சூழல் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
11. கும்பம்:
அவிட்டம் 3, 4 : உங்கள் முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைய தாமதம் ஏற்படும்.
சதயம் : உங்கள் மனதிற்கு சங்கடம் உண்டாகும் வகையில் சில செயல் இன்று நிறைவேறும்.
பூரட்டாதி 1, 2, 3 : மனக்குழப்பம் அதிகரிக்கும் பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும்.
12. மீனம்:
பூரட்டாதி 4 : தடைபட்டிருந்த முயற்சி இன்று நடந்தேறும். எதிர்பார்த்த நன்மைகளை பெறுவீர்கள்.
உத்திரட்டாதி : நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் மனம் மகிழும்படியான சம்பவம் ஒன்று நடைபெறும்.
ரேவதி : சொத்துகளில் இருந்து வந்த பிரச்னை தீரும். பிறர் தர வேண்டிய பணம் தேடி வரும்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் !!