சென்னை: வங்கிக்கணக்கில் மலையாக பணம் சேர வேண்டும் அள்ள அள்ள குறையாமல் பணம் இருக்க வேண்டும் என்றுதான் பலரும் விரும்புகின்றனர். வங்கிக்கணக்கில் எடுக்க எடுக்க பணம் குறையாமல் இருக்க சில ஆன்மீக டிப்ஸ் பாலோ செய்ய வேண்டும்.

வங்கியில் புது அக்கவுண்ட் ஓபன் பண்ணனும். அந்த அக்கவுண்டில் நிறைய பணத்தை சேமித்து வைக்கணும் என்று. சில பேருக்கு அக்கவுண்ட் மட்டும் தான் இருக்கும். ஆனால் அந்த வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் கூட இருக்காது.
வங்கியில் பணத்தை அதிகமாக சேமித்து வைக்க தாந்திரீக ரீதியாக ஆன்மீகத்தில் ஏதேனும் பரிகாரம் இருக்குதா என்று கேட்பவர்களுக்கு இந்த டிப்ஸ் உபயோகமாக இருக்கும். எந்த நாளில், எந்த கிழமையில், எந்த நட்சத்திரத்தில் வங்கி கணக்கை தொடங்கினால் சேமிப்பில் பணம் அதிகமாக தங்கும் பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
முதலில் வியாழக்கிழமை தோறும் நீங்கள் விநாயகரது வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். வியாழக்கிழமை காலையிலேயே எழுந்து குளித்து விட்டு கஸ்தூரி மஞ்சள் தூள் வாங்கி அதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து, அந்த மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். வெற்றிலையின் மேல் கஸ்தூரி மஞ்சளால் பிடித்த, மஞ்சள் பிள்ளையாரை வைத்து அதற்கு ஒரு குங்குமப்பொட்டு, அருகம்புல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
வங்கியில் பணம் நிறைய சேர வேண்டும் என்று அந்த பிள்ளையாரிடம் வியாழக்கிழமை வேண்டுதல் வையுங்கள். தொடர்ந்து இந்த வழிபாட்டை வியாழக்கிழமை செய்து வருபவர்களுக்கு வங்கியில் சேமிப்பு உயர்ந்து கொண்டே செல்லும். வியாழக்கிழமை என்றால் குரு பகவான். குரு பகவானுக்கு உரிய பொருள் தான் இந்த கஸ்தூரி மஞ்சள்.
வியாழக்கிழமை பேங்கில் பணத்தை போட செல்லும்போது உங்களுடைய கையில் சின்னதாக கஸ்தூரி மஞ்சள் கட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். நாட்டு மருந்து கடைகளில் கஸ்தூரி மஞ்சள் சக்கை என்று கேட்டால் கொடுப்பார்கள். அந்த மஞ்சள் பாக்கெட்டில் வைத்து சென்று பேங்க் வேலைகளை செய்யும் போது உங்களுக்கு வங்கியில் இருப்பு தொகை அதிகரித்துக் கொண்டே செல்லும்.
பேங்க் வேலையாக எப்போது நீங்கள் சென்றாலும் உங்கள் கையில் இந்த கஸ்தூரி மஞ்சள் கட்டையை எடுத்துச் சென்றால் பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நீங்கள் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள். பண விஷயத்தில் உங்களுக்கு லாபம் மட்டுமே கிடைக்கும்.
வியாழக்கிழமையும் பூரட்டாதி நட்சத்திரமும் என்னைக்கு சேர்ந்து வருகிறது என்று பாருங்கள். காலண்டரில் பார்த்தால் கட்டாயமாக இப்படி ஒரு நாள் வரும். அதை தேடி கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். இந்த நாளில் நீங்கள் புதுசாக வங்கி கணக்கை தொடங்கி குருபகவானை நினைத்து, அந்த வங்கி கணக்கில் பணம் போட்டால், அந்த அக்கவுண்டில் நிறைய நிறைய பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
அக்கவுண்டில் இருந்து நீங்கள் செலவுக்காக பணம் எடுக்கலாம், மீண்டும் திரும்பவும் போடலாம். ஆனால் அக்கவுண்ட் பேலன்ஸ் ஜீரோ என்ற நிலைமை என்றைக்குமே வரவே. இது ஒரு எளிமையான குறிப்பு தான். ஆனால் ரொம்பவும் சக்தி வாய்ந்த குறிப்பு. பணமே கையில் தங்குவதில்லை நல்ல வருமானம் இருக்கு சம்பளம் வாங்குறேன் பணம் எங்கு போறதுனே தெரியல என புலம்புவரா நீங்கள்
இந்த டிப்ஸ் பாலோ செய்தால் நிச்சயம் பணம் சேரும்.