ஒளிப் பிறக்கும் கார்த்திகை! புண்ணியம் தேடிப் புனித நீராடும் மாதத்தின் சிறப்பை இப்போது காணலாம்.
பாவங்களைப் போக்கி, பரலோகப் பலனை அள்ளித் தரும் ‘துலா ஸ்நானப் பலன்’… கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் காவிரியில் நீராடினாலோ, அல்லது தினமும் அதிகாலையில் நீராடினாலோ இந்த விசேஷப் பலன் நிச்சயம்!

கார்த்திகை என்றாலே தீபத் திருவிழாதான் நினைவுக்கு வரும். இந்த மாதத்தில் வீடுகளிலும், கோவில்களிலும் தீபங்கள் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பானது. இது இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் ஒரு மாதமாகக் கருதப்படுகிறது.
கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால், கார்த்திகை நட்சத்திரம் முருகனுக்கு மிகவும் உகந்த நட்சத்திரமாக உள்ளது. பௌர்ணமியோடு கூடி வரும் கார்த்திகை நட்சத்திர நாள் திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
சிவன் மற்றும் விஷ்ணு வழிபாடு:
கார்த்திகை மாதத்தில் சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் செய்வதும், நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்வதும் விசேஷம். கார்த்திகை திங்கட்கிழமைகளில் (சோமவாரம்) சிவ வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.
விஷ்ணுவை துளசி இலைகளாலும், புஷ்பங்களாலும் அர்ச்சித்து பூஜை செய்வது மோட்ச நிலையை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
புண்ணிய ஸ்நானம்: கார்த்திகை மாதத்தில் தினமும் சூரிய உதயத்தின்போது நீராடுவது சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பலனைத் தரும் என்று கூறப்படுகிறது. கார்த்திகை முதல் நாளில் காவிரியில் நீராடுவது துலா ஸ்நானம் செய்த பலனைத் தரும்.
மேலும், விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இந்த மாதம் சுபகாரியங்கள், குறிப்பாக திருமணங்கள் செய்வதற்கு உகந்ததாக இந்து சாஸ்திரம் கூறுகிறது.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பலரும் இந்த மாதத்தில்தான் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குகின்றனர்.
விரதங்கள் மற்றும் தானங்கள்:
மது, மாமிசம் தவிர்த்து விரதம் அனுஷ்டிப்பவர்கள் பாவங்களிலிருந்து விடுபட்டு விஷ்ணுவின் பாதத்தை அடைவார்கள்.
விளக்கு தானம் செய்வது, தானியம் மற்றும் பழங்களைத் தானம் செய்வது போன்ற செயல்கள் விசேஷ பலன்களைத் தரும்.
கார்த்திகை பௌர்ணமியன்று திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவது உலகப் பிரசித்தி பெற்றது. அன்றைய தினம் கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
கர்மாவை சமாளிப்பது எப்படி? நீங்க செஞ்சது உங்களுக்கே வந்துருச்சா?


