spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆன்மீகம்வீட்டின் வாசல் முதல் பூஜையறை வரை – கார்த்திகை தீபத்தின் ஆன்மீக ரகசியங்கள்!

வீட்டின் வாசல் முதல் பூஜையறை வரை – கார்த்திகை தீபத்தின் ஆன்மீக ரகசியங்கள்!

-

- Advertisement -

ஆன்மிக நம்பிக்கைகளின்படி கார்த்திகை மாதம் முழுவதும் தீபமேற்றி வழிபட்டால் தீய சக்திகள் விலகும், மகாலட்சுமி அருள் கிட்டும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.வீட்டின் வாசல் முதல் பூஜையறை வரை – கார்த்திகை தீபத்தின் ஆன்மீக ரகசியங்கள்!கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், மக்கள் பெரும்பாலும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை ஆவலுடன் எதிர்நோக்கி வருகிறார்கள். 2025ஆம் ஆண்டிற்கான திருக்கார்த்திகை விழா டிசம்பர் 3, புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இது தீபங்களின் திருநாளாகவும், இறைவனின் அருளைப் பெறும் பரிசுத்த நாளாகவும் கருதப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் சுத்தம் செய்வது முதல் அகல் விளக்குகள், குத்துவிளக்குகள் அனைத்தையும் தயார் செய்வது வரை பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆன்மிக நம்பிக்கையின்படி, வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது அமைதி, செல்வ செழிப்பு, குடும்ப ஒற்றுமை, மகிழ்ச்சி உள்ளிட்ட பல நன்மைகளை தரும் என்று கருதப்படுகிறது. இதனை முன்னிட்டு வீட்டில் எங்கு விளக்கேற்ற வேண்டும்? எப்படி தயாரிக்க வேண்டும்? என்ன நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும்? என்பதற்கான வழிகாட்டுதல்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

we-r-hiring

எங்கு விளக்கேற்றினால் என்ன பலன்?

கார்த்திகை தீபத்தில் வீட்டின் பிரதான வாசலில் விளக்கேற்றுவது அதிர்ஷ்டமும் செல்வமும் சேர்க்கும் என நம்பப்படுகிறது. வெளி இருள் நீங்கி, வீட்டுக்குள் நேர்மறை ஆற்றல் நுழையும் என்பதால் பலர் வாசல் பகுதியில் இரட்டை விளக்குகளை ஏற்றி வழிபடுகின்றனர்.

பால்கனி, ஜன்னல் போன்ற இடங்களில் விளக்கேற்றினால் தீய ஆற்றல்கள் விலகும் என ஐதீக நம்பிக்கை உள்ளது. ஒளி வீட்டு சுற்றுப்புறத்தை சுத்தம் செய்கிறது என்பது ஆன்மிக விளக்கம்.

பூஜையறையில் குத்துவிளக்கும் அகல்விளக்கும்

பூஜையறையில் குத்துவிளக்குடன் அகல் விளக்குகளையும் மலர்களால் அலங்கரித்து ஏற்ற வேண்டும். இது இறைவன் வீட்டில் வாசம் செய்வதை குறிப்பதாக கருதப்படுகிறது. தீபத்தின் ஒளி பிரகாசமாக இருக்கும் வகையில் நெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்துவது சிறந்ததாக சொல்லப்படுகிறது.

பழைய அகல் விளக்குகளை எப்படி சுத்தம் செய்வது?

கடந்த ஆண்டு பயன்படுத்திய விளக்குகளை மீண்டும் பயன்படுத்துவோர் அதிகம். எனினும், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 1 அல்லது 3 போன்ற ஒற்றை எண்ணிக்கையில் புதிய அகல் விளக்கை வாங்குவது நல்லது.

பழைய விளக்குகளை சுத்தம் செய்வதற்கு:

கொதிக்கும் நீரில் சிறிது சோப்பு பொடி சேர்த்து ஊறவைத்து விட வேண்டும். எண்ணெய் பிசுக்கு முழுவதும் நீங்கி விடும். பின்னர் காட்டன் துணியால் தேய்த்து நன்றாக காயவைக்க வேண்டும்.

விளக்கேற்றும் நேரமும் முறையும்

திருக்கார்த்திகை அன்று மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை விளக்குகளை ஏற்றுவது மிகவும் நல்ல நேரமாகக் கருதப்படுகிறது. புதிய விளக்குகளை குறைந்தது 4 மணி நேரம் நீரில் ஊறவைத்து வைப்பது அவற்றில் எண்ணெய் கசிவு குறைய உதவும். விளக்கிற்குப் முன் குங்குமம், சந்தனம் இட்டுக் கொண்டு திரியை அமைக்க வேண்டும்.

விளக்குகளை நேரடியாக தரையில் வைக்காமல் தட்டு, இலை போன்றவற்றில் வைத்து ஏற்றுவது சுத்தத்தையும் அழகையும் தரும்.

கார்த்திகை மாதம் முழுவதும் தீபமேற்றினால்…

ஆன்மிக நம்பிக்கைகளின்படி கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் தீபமேற்றுவோர் நினைத்த காரியம் நிறைவேறும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக திருக்கார்த்திகை அன்று அதிக எண்ணிக்கையில் தீபமேற்றி வழிபட்டால் தீய சக்திகள் விலகும், மகாலட்சுமி அருள் கிட்டும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

அதனால் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் விளக்குகள், பூக்கள், இனிப்புகள், அவல், பொரி, வாழையிலை உள்ளிட்ட தேவையானவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் பகல் 1மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

MUST READ