spot_imgspot_img
Homeசெய்திகள்வானிலைதமிழகத்தில் பகல் 1மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் பகல் 1மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

-

- Advertisement -

தமிழகத்தில் மதியம் 1 மணிக்குள் 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் பகல் 1மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!தமிழகத்தில் பகல் 1 மணிக்குள் 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கோவை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் நேற்று கடந்த 24 மணி நேரத்தில் 6 இடங்களில் மிக கனமழையும், 46 இடங்களில் கனமழை பெய்துள்ளது எனவும், தமிழகத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, எண்ணூா் செங்கல்பட்டில் தலா 15 செ.மீ  மழையும், திருவண்ணாமலை, சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் தலா 13 செ.மீ மழையும், திருமயம், விம்கோ, சென்னை, தாமரைப் பாக்கத்தில் தலா 12 செ.மீ மழையும், மணலி, புதுநகா், திருக்கழுக்குன்றம், மேடவாக்கம், திருவாரூா், குடுமியான் மலை, இலுப்பூரில்  தலா 11 செ.மீ மழையும் சென்னை, பள்ளிக் கரணை, மாமல்லபுரம், வடக்குத்து, கேளம்பாக்கம், செங்குன்றம், உளுந்தூா்ப் பேட்டையில் தலா 10 செ.மீ மழையும், தொண்டி, ஒக்கியம், துரைப்பாக்கம்,  பொன்னேரி, திருவாரூா், கத்திவாக்கம், அம்பத்தூ்ா, பெள்ளாச்சியில் தலா 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

we-r-hiring

MUST READ