HomeBreaking News நீட் விவகாரம்: 5-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்!

 நீட் விவகாரம்: 5-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்!

-

- Advertisement -

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கடும் அமளி காரணமாக, நாடாளுமன்ற நடவடிக்கைகள் 5-வது நாளாக இன்றைக்கும் முடங்கின. நீட் விவகாரம்: 5-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்!

எதிர்க்கட்சிகள் கடும் அமளி – மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு
இன்று காலை மக்களவை கூடியதும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பிக்கள்) உடனடியாக நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரத்தைக் கையில் எடுத்தனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, அவையின் மையப் பகுதிக்கு வந்து தொடர் கோஷங்களை எழுப்பினர்.

we-r-hiring

அவையின் அமைதியைப் பேணுமாறு சபாநாயகர் ஓம் பிர்லா உறுப்பினர்களிடம் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும், எதிர்க்கட்சியினரின் அமளி தொடர்ந்து நீடித்ததால், அவை கூடிய வெறும் 3 நிமிடங்களிலேயே மக்களவையின் நடவடிக்கைகளை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். தொடர்ந்து 5-வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளதால், டெல்லி அரசியல் களம் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.

நீட் வினாத்தாள் கசிவு – தார்மீக பொறுப்பேற்க மறுக்கும் அமைச்சர் தர்மேந்திரா பிரதான்

MUST READ