Homeசெய்திகள்சென்னைசென்னையில் 79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் தேசியக்...

சென்னையில் 79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் தேசியக் கொடியேற்றுகிறார்!

-

- Advertisement -

நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 79-வது சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை ஏற்கவுள்ளார்.சென்னையில் 79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் தேசியக் கொடியேற்றுகிறார்!

காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார் — தலைமைச் செயலகத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்!
சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, தமிழ்நாட்டில் வீர தீரச் செயல்கள் புரிந்த காவல்துறையினர், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் பணியாற்றிய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் தகுதிக்கான பதக்கங்கள் மற்றும் விருதுகளை வழங்கிச் சிறப்புரையாற்றவுள்ளார்.

we-r-hiring

விழாவிற்கான அதிகாரப்பூர்வ முன்னேற்பாடுகளைத் தமிழக அரசின் பொதுத்துறை தற்போது தீவிரமாகத் தொடங்கியுள்ளது.

  • பிரம்மாண்ட பந்தல்: கோட்டை கொத்தளத்திற்கு எதிரே முக்கியப் பிரமுகர்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அமர்வதற்காகப் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
  • பாதுகாப்பு ஏற்பாடுகள்: விழா நடைபெறும் தலைமைச் செயலக வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர பாதுகாப்பு வளையம் அமைப்பதற்கான திட்டமிடல்களும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டுத் தலைநகர் சென்னையில் விழாப் கலைக்கட்டி வருகிறது.

தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம்? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 2-வது நாளாக தீவிர விசாரணை!

MUST READ