Homeசெய்திகள்சென்னைகுடியிருப்புப் பகுதிக்குள் சமையல் எரிவாயு குடோன்: எர்ணாவூரில் பொதுமக்கள் திடீர் போராட்டம் மற்றும் முற்றுகையால் பரபரப்பு!

குடியிருப்புப் பகுதிக்குள் சமையல் எரிவாயு குடோன்: எர்ணாவூரில் பொதுமக்கள் திடீர் போராட்டம் மற்றும் முற்றுகையால் பரபரப்பு!

-

- Advertisement -

சென்னை எர்ணாவூர் முல்லை நகர் குடியிருப்புப் பகுதியில் பாரத் சமையல் எரிவாயு (Bharat Gas) குடோன் அமைப்பதற்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குடியிருப்புப் பகுதிக்குள் சமையல் எரிவாயு குடோன்: எர்ணாவூரில் பொதுமக்கள் திடீர் போராட்டம் மற்றும் முற்றுகையால் பரபரப்பு!

கடந்த நான்கு ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த இத்திட்டத்திற்கு, தற்போது திடீரெனச் சிலிண்டர் லாரிகள் கொண்டுவரப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

we-r-hiring

நான்கு ஆண்டுகளாகக் கிடப்பில் கிடந்த திட்டம்
எர்ணாவூர் முல்லை நகர் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சமையல் எரிவாயு குடோன் அமைப்பதற்காக இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்போதே அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநகராட்சி, தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறைக்கு முறையான மனுக்களை அளித்தனர்.

தடையில்லா சான்றிதழ் மறுப்பு: பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாகவும், தீயணைப்புத் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்காததாலும் இந்தத் திட்டம் கடந்த நான்கு ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

திடீர் லாரி வருகை: இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி சிலிண்டர்களை ஏற்றிய லாரிகள் குடோனுக்குக் கொண்டுவரப்பட்டு இயக்க முயன்றதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பொதுமக்களின் போராட்டம் மற்றும் காவல்துறையின் பேச்சுவார்த்தை
மக்களின் கொந்தளிப்பு: 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்தப் பகுதி குறுகிய தெருக்களைக் கொண்டது என்பதால், இங்கு எரிவாயு குடோன் அமைப்பது தங்களின் உயிருக்குப் பெரும் அச்சுறுத்தல் எனக்கூறி பெண்கள் மற்றும் ஆண்கள் திரண்டு குடோனை முற்றுகையிட முயன்றனர்.

காவல்துறை உறுதி:
தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த எண்ணூர் காவல் உதவி ஆணையர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பெட்ரோலிய நிறுவனம் முறையான அனுமதிகள் பெற்றுள்ளதா என்பதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மக்களின் பாதுகாப்பிற்குத் குந்தகம் விளைவிக்கும் செயல்களுக்குத் காவல்துறை துணை போகாது என்றும் உறுதியளித்தார்.

லாரிகள் அப்புறம்: முறையான அனுமதிகள் சரிபார்க்கப்படும் வரை அங்கு லாரிகளை நிறுத்தக்கூடாது என்ற உத்தரவைத் தொடர்ந்து, லாரிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் முக்கியக் குற்றச்சாட்டுகள்
பாதுகாப்பு அச்சுறுத்தல்: குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியில் விபத்து ஏதேனும் நேர்ந்தால் குறுகிய தெருக்கள் காரணமாக எவரும் தப்பியோட முடியாது என மக்கள் வேதனை தெரிவித்தனர்.

ஆட்சி மாற்றத்திற்குப் பின் அனுமதி எப்படி?: கடந்த 4 ஆண்டுகளாக அமைதியாக இருந்த இந்த விவகாரத்தில், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு திடீரென்று சிலிண்டர் லாரிகள் நுழைந்திருப்பதற்குப் பின்னால் முறைகேடுகள் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமணமாகி 5 மாதங்களில் சோகம்: ஈகோ பிரச்சனை காரணமாக ஐ.டி பெண் ஊழியர் தற்கொலை!

MUST READ