சென்னை விமான நிலைய நிர்வாகத்தை மாற்றியமைக்குமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் ரகசியக் கடிதம் எழுதியுள்ள விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்ட தவெக அரசு, தற்போது சென்னை விமான நிலையத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்க மறைமுகமாக உதவுவதாகக் கூறி அதன் ஆதரவு கட்சிகளுமே கடும் அதிர்ச்சியடைந்துள்ளன.


விமான நிலைய நிர்வாகமும் தனியார்மயமாக்கல் அச்சமும்
சென்னை விமான நிலையம் இதுவரை ஒன்றிய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. நாட்டின் முக்கியப் பெருநகர விமான நிலையங்களைத் தனியாருக்கு வழங்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ள நிலையில், ஏற்கனவே மும்பை, அகமதாபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல விமான நிலையங்கள் அதானி குழுமத்தின் வச சென்றுள்ளன.
தற்போது கொல்கத்தா மற்றும் சென்னை விமான நிலையங்களை மட்டுமே விமான நிலைய ஆணையம் நிர்வகித்து வருகிறது. வழக்கமாகப் பொதுத்துறைச் சொத்துக்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதை மாநில அரசுகள் கடுமையாக எதிர்ப்பது வழக்கம். ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, தவெக அரசு விமான நிலையத்தின் நிர்வாகத்தை மாற்றியமைக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தியிருப்பது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ரகசியக் கடிதமும் அதிரவைக்கும் பின்னணியும்
வழக்கமாக முதல்வர் விஜய் எழுதும் கடிதங்கள் உடனுக்குடன் ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும். ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்ட இந்தக் கடிதம் கடுமையான ரகசியப் காக்கப்பட்டு தற்போது வெளியில் கசிந்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தவெக அரசின் இந்தக் கோரிக்கையின் காரணமாக, சென்னை விமான நிலையத்தின் நிர்வாகம் தொழிலதிபர் அதானி அல்லது ஜிஎம்ஆர் (GMR) போன்ற பெருநிறுவனங்களின் கைகளுக்குச் செல்ல வழிவகுத்துவிடும் எனப் பொருளாதார நிபுணர்களும் அரசியல் விமர்சகர்களும் எச்சரிக்கின்றனர்.

கூட்டணிக் கட்சிகள் மற்றும் விவசாயிகளின் அதிர்ச்சி
ஏற்கனவே மேல்மா சிப்காட் நில எடுப்பு விவகாரத்தில் விவசாயிகளின் எதிர்ப்புக்குப் பணிந்து உத்தரவைத் திரும்பப் பெற்ற தவெக அரசு, தற்போது சென்னை விமான நிலைய விவகாரத்தில் காட்டிவரும் இந்த மௌனமும் ரகசிய அணுகுமுறையும் அதன் கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த அதிரடி நகர்வு எதிர்வரும் நாட்களில் மிகப்பெரிய அரசியல் விவாதத்திற்குக் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்று, பொதுத்துறை நிறுவனங்களையும், நாட்டின் முக்கிய வானூர்தி நிலையங்களையும் தனியாருக்கு வழங்குவது தொடர்பான முடிவுகள் மாநிலத்தின் பொருளாதார நலன்களையும், பொதுமக்களின் உரிமைகளையும் நேரடியாகப் பாதிக்கும் என்பதால், இவ்விவகாரத்தில் அரசு வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பெரம்பூரில் 3 நாளாக மின்சாரம் இன்றி தவிப்பு: ஆத்திரத்தில் பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் முற்றுகை!
