- Advertisement -
டூ வீலர் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. அண்ணாசாலை வெங்கடேசன் நாயக்கன் தெருவில் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடை உள்ளது.
இன்று நண்பகல் கடையில் ஊதுபத்தியை கொளுத்தி பூஜை செய்யும் போது எதிர்பார்த்த விதமாக தீ விபத்து ஏற்பட்டது.


அங்குள்ளவர்கள், தீயணைப்பு துறையினருக்கு விரைந்து தகவல் தெரிவித்தனர். மயிலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீவிபத்தில் உயிர்ச்சேதம் இல்லை. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மட்டுமே சேதம் அடைந்தன.


