- Advertisement -
ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, சுவாமி சிவானந்தா சாலை வழியாகத் தலைமைச் செயலகம் நோக்கிச் சென்றபோது போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.


அப்போது அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் மற்றும் இளைஞர் பெருமன்றத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
போலீசார் தாக்கியதில் மாணவர் பெருமன்ற உறுப்பினர் கவினுக்கு மண்டை உடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் ஓமந்தூரார் தோட்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.
சென்னையில் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம் – 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது
