சென்னையில் பூந்தமல்லி – வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை வரும் அக்டோபர் 11-ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.


ஒருபுறம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் மறுபுறம் மெட்ரோ பணிகள் நிறைவடைந்ததாக கூறப்படும் பகுதிகளில் சாலைகள் இன்னும் முழுமையாக சீரமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக போரூர், வளசரவாக்கம், வளசரவாக்கத்தில் உள்ள ஆழ்வார் திருநகர், விருகம்பாக்கம், வடபழனி மெட்ரோ நிறுத்தம் அருகில் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் பல இடங்களில் குண்டும் குழியுமாகவும் சாலைகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
சாலைகளில் ஆங்காங்கே காணப்படும் பள்ளங்களால் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, கார் மற்றும் பேருந்து ஓட்டுநர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, வாகனங்கள் நீண்ட நேரம் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் குறுகிய தூரத்தை கடக்கவே கூடுதல் நேரம் தேவைப்படுவதாகவும், பணிக்கு செல்வோர் மற்றும் அவசர தேவைகளுக்காக பயணிப்போர் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மழைக்காலங்களில் சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால், பள்ளங்கள் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
சாலை சேதத்தால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, சாலையோரம் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். சாலைகளில் தேங்கும் மழைநீர், அதிகளவில் எழும் தூசி, கடைக்கும் முன் வாகனம் நிறுத்த போதிய இடமில்லாமல் இருப்பது உள்ளிட்ட பிரச்சினைகளால் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சிரமப்படுவதாக கடை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மெட்ரோ பணிகள் தொடங்கிய காலத்திலிருந்து தங்களது வியாபாரம் முன்பை விட குறைந்துள்ளதாகவும், சாலைகள் சீரமைக்கப்படாததால் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட உள்ள நிலையில், மெட்ரோ பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் சாலைகளை உடனடியாக முறையாக சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.
இது குறித்து பொதுமக்கள், கடை வியாபாரிகள், வாகன ஓட்டிகள் என மூன்று தரப்பும் பாதிக்கப்படுவதால் அது குறித்து அவர்களிடமே விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
அமீர் பாஷா ஆட்டோ ஓட்டுனர் பேட்டி.
நான் 26 வருடம் போரூர் பகுதிகளில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறேன். மெட்ரோ பணி ஆரம்பித்ததில் இருந்து சாலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் குண்டும் குழியுமான பள்ளத்தில் காலை நேரங்களில் அதிகளவில் இளைஞர்கள் கீழே விழுவதாலும் நாங்கள் அவர்களை தூக்கி விடுவதாகவும் கூறினார்.
இந்த மாதிரி சாலைகளில் வாகனம் ஓட்டுவதால் வாகனங்கள் அதிக அளவில் பழுது ஏற்படுவதாகவும் அதற்காக உதிரி பாகங்கள் வாங்குவதற்கு மிகவும் செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஏற்படுவதாலும் இந்த ஆட்டோ தொழிலை விட்டுவிட்டு எங்காவது வாட்ச்மேன் வேலைக்கு செல்வதாக கூறினார்.
பொதுமக்கள் சந்திக்கூடிய பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் பிரபாவதி பேட்டி..
சாலைகள் பள்ளத்தால் நிறைய விபத்து ஏற்படுகிறது. இந்த நாள் பொதுமக்கள் ஆரோக்கியமாக சாலையை கடக்க முடியவில்லை. குறிப்பாக முதியவர்கள் சாலையை கடக்கும் பொழுது குண்டும் கூலியமாக இருப்பதால் நிதானம் இல்லாமல் கீழே விழக்கூடிய சூழலும் ஏற்படுகிறது.
சிவலிங்கம் ஆட்டோ ஓட்டுனர் பேட்டி.
இந்த ஆட்டோ தொழிலை 20 வருடமாக செய்து வருகிறேன். இந்த மெட்ரோ வேலை ஆரம்பித்ததிலிருந்து வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. இடுப்பு எலும்பு உடைந்து விடுகிறது.
எங்கு பார்த்தாலும் சாலைகள் பள்ளமாகவே காணப்படுகிறது ஒரு பக்கம் மெட்ரோவிற்காக தோண்டப்பட்ட பள்ளம், மற்றொரு பக்கம் மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளம் இன்னும் எந்த வேலையும் முடிந்த பாடில்லை.
இலவச பேருந்து விட்டதால் ஆட்டோக்காரர்கள் சாகக்கூடிய நிலைமையில் இருக்கிறோம்.
குன்னங்குளியுமான சாலைகளில் ஆட்டோவை ஓட்டுவதால் கியர் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பாகங்கள் எக்கச்சக்கமான வேலைகள் வைக்கிறது. ஒரு உதிரிபாகங்கள் வாங்குவதற்கு கூட முடியவில்லை அதுவும் அதிக விலை விற்கப்படுகிறது. ஆட்டோ ஓட்டுநர்கள் மிகவும் சிரமப்படுகிறோம்.
ஆட்டோவில் சென்றால் வண்டி குலுங்குகிறது என்று பயணிகள் ஏற மறுக்கிறார்கள். எங்க பார்த்தாலும் பள்ளமாக இருக்கிறது பள்ளத்தை யாரும் சரி செய்வோம் வருவதில்லை.
இல்லையென்றால் பழைய துணியை தைத்து போடுவது போல் அங்கங்கே பேட்ச் ஒர்க் போட்டால் கூட போதுமானதாக இருக்கும்.
ஆழ்வார் திருநகர் அருகே ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பள்ளத்திற்கு அருகில் ஒரு கடையில் வேலை செய்யும் பாதுகாவலர் நரசிம்மன் பேட்டி.
இந்த பகுதியில் இதற்கு முன்பு பெரிய பள்ளம் இருந்தது நாங்கள் தான் எங்கள் கடைக்கு முன்பு இருந்த ஒரு பெரிய இரும்பு தகரத்தை எடுத்து அதில் வைத்திருக்கிறோம். இந்த பள்ளத்தில் நிறைய வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாக இருக்கிறார்கள் நாங்களே அவர்களை தூக்கிவிட்டு முதலுதவி எல்லாம் செய்திருக்கிறோம்.
அதுமட்டுமல்லாமல் அந்த பள்ளத்தில் நாங்களே பத்து முறைக்கு மேல் மண்கள் வாரிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் அந்த இடத்தில் தொடர்ந்து பள்ளம் விழுந்து கொண்டே தான் இருக்கிறது.
அந்தப் பள்ளத்தில் இதுவரைக்கும் குறைந்தபட்சம் ஆயிரம் பேராவது தங்களுடைய செல்போனை கீழே தவற விட்டிருப்பார்கள். இதையெல்லாம் பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.
ராமதாஸ் பொதுமக்கள் பேட்டி..
இந்த இந்தப் பள்ளத்தில் நிறைய பொதுமக்கள் விழுகிறார்கள் விழுந்து கை கால்கள் எல்லாம் உடைந்து இருக்கிறது இதை சரி செய்து கொடுங்கள் என பலமுறை மாநகராட்சியில் புகார் கொடுத்திருக்கிறோம். அப்போதைக்கு அந்த பள்ளத்தில் ஜல்லி குட்டி விட்டு சென்று விடுவார்கள்.
கிட்டத்தட்ட நான்கு ஐந்து மாதங்களாக இது பிரச்சனை இருக்கிறது ஆனால் இதற்கு நிரந்தரமான தீர்வு செய்வதற்கு யாரும் முன் வரவில்லை. நான் நிறைய பள்ளத்திற்கு மண்ணள்ளி போட்டிருக்கிறேன்.
இந்த படங்களை உடனடியாக மூடி யாருக்கும் விபத்து ஏற்படாமல் செய்தாலே போதுமானதாக இருக்கும் என அரசருக்கு கோரிக்கை.
வளசரவாக்கம் பகுதியில் மெட்ரோ பணிக்காக தோண்டப்பட்ட மிகப்பெரிய குழிக்கு பக்கத்தின் அருகில் டீக்கடையில் வேலை பார்க்கும் ஊழியரின் கணேஷ்குமார் பேட்டி.
மற்ற பணி ஆரம்பித்ததிலிருந்து எங்களுக்கு கடை எடுத்துவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. முன்பை போல் வியாபாரம் இல்லை வியாபாரம் குறைந்துவிட்டது. மற்றவர்களை தொடர்ந்து நடைபெறுவதால் தூசி அதிகமாக கடைகள் வருகிறது இதனால் ஒரு உணவு பொருளை மக்களுக்கு முறையாக கொடுக்க முடியவில்லை. நாங்கள் நன்றாக செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் இதுபோன்ற சிரமங்களால் எங்களால் அதை செய்ய முடியவில்லை.
மெட்ரோ பணி தொடங்குவதற்கு முன்பாக நன்றாக வியாபாரம் இருந்தது ஆனால் இப்போது மிகவும் குறைந்துவிட்டது இந்த மெட்ரோபனி சரி செய்த பிறகு முன்வைப்போல வியாபாரம் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அது மட்டுமில்லாமல் அந்த பகுதியில் போக்குவரத்தும் அதிகமாக காணப்படுகிறது. இந்த வேலையை சீக்கிரமாக முடித்து எங்களுக்கு வியாபாரம் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
அதேபோல மழைக்காலங்களில் ஏற்பட்டிருக்க கூடிய பள்ளங்களில் மழைநீர் தேங்கி விடும் அதனால் கடைக்கு சென்று வருவதற்கு சிரமமாக இருக்கும்.
பள்ளத்தில் அருகில் மரக்கடை வைத்துள்ள அகபால் சாமி பேட்டி..
மெட்ரோப்பணி ஆரம்பித்ததில் இருந்து எங்களுக்கு வியாபாரம் மும்பை போல் இல்லை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. கடைக்கு முன்பு வாகனங்களை நிறுத்த முடியவில்லை அதனால் மக்கள் நின்று வாங்குவதற்கு சிரமப்படுகிறார்கள். இதனை கொஞ்சம் விரைந்து முடித்தால் நன்றாக இருக்கும். அதனையும் மழைக்காலத்திற்குள் முடித்தால் தான் சிரமம் இல்லாமல் இருக்கும் இல்லையென்றால் தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கிவிடும். அதேபோல மழை நீர் கால்வாயும் அவசியம்தான் ஆனால் வேலையை சீக்கிரம் முடித்தால் நன்றாக இருக்கும்.
மருவமனையில் வேலை பார்க்கும் ஊழியர் நந்தகுமார் பேட்டி.
இந்தப் பள்ளத்தினால் நிறைய வாகன ஓட்டுகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகிறார்கள் நானுமே சில முறை இந்த பள்ளத்தினால் கீழே விழுந்திருக்கிறேன்.
மெட்ரோ வேலைகள் நடைபெற்று வருவதால் மிகவும் சிறப்புமாக இருக்கிறது. இன்று சாலையை மட்டும் அரசு கவனத்தில் கொண்டு சீர்படுத்தி கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும். முன்பு ஓரளவுக்கு இந்த சாலைகள் இருந்தது ஆனால் இப்பொழுது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
அதேபோல் நான் மருத்துவமனையில் வேலை பார்ப்பதால் அதிகளவு கீழே விழுந்து முதலுதவி பெறுவதற்காக வருவார்கள்.
சாலைகளில் ஏற்பட்டிருக்கக் கூடிய பள்ளத்தினால் அலுவலகம் செல்வதற்கு மிகவும் தாமதமாகிறது சிரமமாக உள்ளது. உள்ளத்தில் தடுமாறி கீழே விழுவது நமக்கு மட்டுமல்ல வாகனத்திற்கும் அடிப்படுகிறது கூடுதல் செலவாகிறது.
