- Advertisement -
காசிமேடு மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் – உயிரிழந்த 9 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிக்கை!
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்கள் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஆந்திர கடல் பகுதியில் முரசு புயலில் சிக்கி உயிரிழந்த 9 மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதுதொடர்பாக நிதி அமைச்சர் மரிய வில்சன் தலைமையில் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, மீனவர்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
