- Advertisement -
சென்னை பெரம்பூரில் உள்ள அம்மா உணவகத்தில் சாப்பிடச் சென்ற 19 வயது இளைஞர் ராஜேஷ் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட அம்மா உணவக ஊழியர் உதயபானு (50), எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை நீதிமன்ற உத்தரவின்பேரில் புழல் சிறையில் அடைத்தனர்.
