சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினராக இருந்த வி.எஸ்.பாபு கடந்த நவம்பர் 19ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே திருச்சி கிழக்கு, பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம், கரூர் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன.
இந்த நிலையில், வி.எஸ்.பாபு மறைவால் கொளத்தூர் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை செயலகம் தொகுதி காலியானது தொடர்பான தகவலை இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பியுள்ளது. இதனால், தமிழகத்தில் காலியாக உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
