HomeBreaking Newsஎடப்பாடி,ஸ்டாலின்,ரஜினி திடீர் சந்திப்பு!

எடப்பாடி,ஸ்டாலின்,ரஜினி திடீர் சந்திப்பு!

-

- Advertisement -

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெற்றது.

குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தைத் தொடர்ந்து, நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து:

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்று, மணமக்களுக்கு மலர்க்கொத்து வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். அவருடன் அவரது தாயார் ஷோபா சந்திரசேகரும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

கேரள முதல்வர் வி.டி. சதீசன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட பிற மாநில அரசியல் தலைவர்களும் விழாவில் கலந்துகொண்டனர். ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

அரசியல் தலைவர்கள் சந்திப்பு:

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்த், நடிகை ராதிகா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் மணமக்களை வாழ்த்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த் ஆகியோர் சந்தித்துப் பேசிக்கொண்டனர்.

அரசியல் களத்தில் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்ட தலைவர்கள் ஒரே நிகழ்ச்சியில் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. இந்தச் சந்திப்பு தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

பிரதமர் மோடி வாழ்த்துக் கடிதம்:

அனிருத் – காவ்யா மாறன் திருமணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, திரையுலகம் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இசையமைப்பாளராகத் தமிழ் திரையுலகில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்துள்ள அனிருத், சன் குழுமக் குடும்பத்தைச் சேர்ந்த காவ்யா மாறனை மணந்துள்ள நிலையில், இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அரசியல் மற்றும் திரையுலகப் பிரபலங்களின் சந்திப்பால் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

குறிப்பாக, மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த் சந்திப்பு பேசுபொருளாகியுள்ளது.

இடைத்தேர்தல் நாடகங்களும் அரசியல் வீழ்ச்சியும்! தமிழ்நாட்டைச் சூழ்ந்த ‘நாடக மேடை’ கலாச்சாரம் – பழ. கருப்பையா கடும் விமர்சனம்

 

MUST READ