- Advertisement -
கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும், இயற்கையின் சவால்களையும் எதிர்கொண்டு, உயிரையும் உடைமையையும் பணயம் வைத்து உழைக்கும் மீனவப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
மீனவச் சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வது நம் அனைவரின் கடமையாகும் என்றும் அவர் தனது மீனவர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
