spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஆவின் பால் பண்ணையில் சிறார் தொழிலாளர்கள்! சம்பளம் கொடுக்காத கொடுமை!

ஆவின் பால் பண்ணையில் சிறார் தொழிலாளர்கள்! சம்பளம் கொடுக்காத கொடுமை!

-

- Advertisement -

ஆவின் பால் பண்ணையில் சிறார் தொழிலாளர்கள்! சம்பளம் கொடுக்காத கொடுமை!

அரசு பொது நிறுவனத்தில் சிறார்கள் வேலை செய்த கொடுமை நிகழ்ந்து இருக்கிறது. அதிலும் அந்த சிறார்கள் சம்பளம் கொடுக்காத பெரும் கொடுமையும் நிகழ்ந்திருக்கிறது. அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் தான் இந்த கொடுமை அரங்கேறி இருக்கிறது. அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றிய சிறார்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்று பால் பண்ணை வாசலில் அமர்ந்து 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆவின் பால் பண்ணையில் சிறார் தொழிலாளர்கள்! சம்பளம் கொடுக்காத கொடுமை!
பால்பண்ணை வாசலில் சிறார்கள்

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ஆவின் பால்பண்ணை தொழிற்சாலையில் 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த  ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

we-r-hiring

இதில் 30-க்கும் மேற்பட்ட சிறார் தொழிலாளர்கள் பணியாற்றிய விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக கடந்த 1 ½  மாத ஊதியம் வழங்காத காரணத்தினால் தற்போது அவர்கள் ஆவின் பால் பண்ணை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவின் பால் பண்ணையில் சிறார் தொழிலாளர்கள்! சம்பளம் கொடுக்காத கொடுமை!
சிறார் தொழிலாளர்கள் போராட்டம்

கோடைக் காலம் துவங்கியுள்ள நிலையில் ஆவின் உபயோகப் பொருட்களான ஐஸ்கிரீம், மில்க் ஷேக் போன்ற பொருட்களை பேக்கிங் செய்ய இவர்கள் பணியமர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. தனியார் தொழிற்சாலையில் சிறார்கள் பணியமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்க அரசாணை இருக்கும் நிலையில் அரசு பொது நிறுவனத்தில் சிறார்கள் பணியமர்த்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவின் பால் பண்ணையில் சிறார் தொழிலாளர்கள்! சம்பளம் கொடுக்காத கொடுமை!
சிறார்கள் போராட்டம்

30-க்கும் மேற்பட்ட சிறார் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஊதியம் வழங்காததால் எழுந்த புகாரை அடுத்து சிறார் தொழிலாளர்கள் செய்த ஆர்ப்பாட்டத்தினால் சிறார் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. தொடர்ந்து அவர்கள் வாசலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

MUST READ