சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, புதிய உச்சமாக ரூ.58,720-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத்தங்கத்தின் விலை தொடந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதனால் சாமானிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் கடந்த 2 நாட்களாக ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.58,400-க்கும், கிராம் ரூ.7,300-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.320 உயர்ந்து புதிய உச்சத்தினை எட்டியுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனு ரூ.320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.58,720-க்கு விற்பனையாகிறது. இதேபோல் ஆபரணத்தங்ஙகம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.7,340-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து, கிராம் ரூ.112-க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.