Homeசெய்திகள்அரசியல்அதிமுகவின் ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் - இன்பதுரை எம்.பி

அதிமுகவின் ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் – இன்பதுரை எம்.பி

-

- Advertisement -

அதிமுகவின் ஆர்ப்பாட்டம் நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என அதிமுக எம்.பி.இன்பதுரை தெரிவித்துள்ளார்.அதிமுகவின் ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் - இன்பதுரை எம்.பி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து புகார் மனு அளித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்.பி.இன்பதுரை, “தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவிருக்கும் அதிமுகவின் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்கனவே காவல்துறையின் அனுமதியை பெற்றுவிட்டதாகவும், நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற வேண்டியிருப்பதாக கூறினார்.

ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதியை பெற இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருக்கும் சுவிதா மொபைல் செயலி வேலை செய்யவில்லை என்பதால் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து புகார் அளித்திருப்பதாகவும் இன்பதுரை கூறினார்.

we-r-hiring

ஆப் மூலமாக மட்டுமல்ல மாவட்ட தேர்தல் அதிகாரிகளை சந்தித்து நேரிலும் ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதி கோரி மனு கொடுக்கலாம் எனவும், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்குவதாக அர்ச்சனா பட்நாயக் உறுதியளித்திருப்பதாகவும் இன்பதுரை தெரிவித்தார். இதன் மூலம் நாளை அதிமுகவின் ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

கள்ளக்குறிச்சி கலெக்டரை இடமாற்றம் செய்ய வேண்டும் – பாபு முருகவேல் கோரிக்கை

MUST READ