கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளாா்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்களுக்கு பிறகு புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட செந்தில்குமார் அவர்களை தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளில் புறக்கணித்து வந்தார். இது சம்பந்தமாக பல்வேறு நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் இடத்திலே சட்டமன்ற உறுப்பினர் மூலமாக கோரிக்கை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் மீது திராவிட முன்னேற்றக் கழகத்தால் நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் எந்தவிதமான முன்னெடுப்பும் எடுக்காமல் இருந்தார். நேற்று இந்திய தேர்தல் நாணயம் தமிழ்நாட்டிற்கு எதிர்வரும் 23.4.2026 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என்று அறிவித்து, தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட உடனேயே தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததாகவும் அறிவித்திருந்தது.
சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். அந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக திறக்கப்படும் நிழற்குடை, பொது கட்டிடங்கள், மக்கள் பயன்பாட்டிற்கு வரும் கட்டிடங்களில் சட்டமன்ற உறுப்பினர் என்கிற முறையில் அவருடைய பெயர் அதில் பதிக்கப்பட வேண்டும் மாறாக தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் பெயரும், மாவட்டத்திற்கு சம்பந்தமில்லாத திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சர் எ. வ. வேலு பெயரும் அந்த கட்டிடங்களில் பதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்திருக்கிறது.

ஆட்சியிலே இருக்கிற போது மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் எந்தவிதமான கேள்விக்கும் உள்ளாக்காத இருந்தபோது தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்ட இந்த சூழ்நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒரு அறிவிக்கப்படாத திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் போல செயல்படுவது மிகவும் கண்டனத்திற்குரியது, இந்த அதிகாரியை வைத்து வருகிற பொது தேர்தலை சந்திப்பது என்பது மிகவும் சவாலான ஒன்றாக இருக்கும். இருக்கிற அனைத்து தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் என்பது நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதற்கு உண்டான சாத்திய கூறுகள் இல்லை.
எனவே தலைமை தேர்தல் அதிகாரி உடனடியாக இதில் தலையிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரை பெற்று உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவரை இடம் மாற்றம் செய்து நேர்மையான ஒரு அதிகாரியை அந்த மாவட்டத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலராக நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளாா்.
திருவள்ளூர் மாவட்ட வாக்காளர் நிலவரம் 2026: 10 தொகுதிகளில் 29.62 லட்சம் வாக்காளர்கள்!
