Homeசெய்திகள்மாவட்டம்"திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டம்": ராமநாதபுரம் உப்பூர் அனல் மின் நிலையப் பணிகளை மீண்டும்...

“திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டம்”: ராமநாதபுரம் உப்பூர் அனல் மின் நிலையப் பணிகளை மீண்டும் தொடங்க தமிழக அரசு உத்தரவு!

-

- Advertisement -

திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அனல் மின் நிலையப் பணிகளை மீண்டும் தொடங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை அடுத்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம்

we-r-hiring

ரூ.12,778 கோடி மதிப்பிலான அனல் மின் நிலையத் திட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் உப்பூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) சார்பில் ரூ.12,778 கோடி மதிப்பீட்டில் 1,600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி கடந்த அதிமுக ஆட்சியில் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தைப் பெற்ற பாரத் மிகுமின் நிறுவனம் (BHEL) மற்றும் எல் அண்ட் டி (L&T) ஆகிய இரு நிறுவனங்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டன. இதற்காக 767.83 ஏக்கர் விவசாயப் பட்டா நிலங்களும், 229.59 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களும் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. மேலும், தூத்துக்குடியிலிருந்து ரயில் மூலம் நிலக்கரி கொண்டுவருவதற்காக ராமநாதபுரத்திலிருந்து உப்பூருக்கு 25 கி.மீ. தொலைவுக்குப் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டமும் இதில் அடங்கும்.

5 ஆண்டுகளாகக் முடங்கிய பணிகள்

கடந்த 2021-ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. சுமார் ரூ.4,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டு 40 சதவீதப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட பணிகளைத் தொடர அனுமதி வழங்கப்படாததால் ஒப்பந்த நிறுவனங்கள் பணிகளைப் பாதியில் நிறுத்திவிட்டுச் சென்றன. இதனால் கடந்த 5 ஆண்டுகளாகப் பணிகள் முடங்கிக் கிடந்தன.

தொழிற்சாலைகள் இல்லாத ராமநாதபுரம் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கும் இத்தகைய பெரிய திட்டங்கள் அவசியம் என்பதால், திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்களும் தொழில்துறையினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

மீண்டும் தொடங்கிய பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதும், மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் உப்பூர் அனல் மின் நிலையப் பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பணிகளுக்கான ஆயத்தங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரன் உப்பூர் அனல் மின் நிலைய திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, திட்டத்திற்குத் தேவையான தனியார் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், அரசு நிலங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் நில நிர்வாகத் துறை மூலம் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

அனைத்துப் பணிகளையும் விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஆட்சியரின் இந்த ஆய்வின்போது, ராமநாதபுரம் கோட்டாட்சியர் செ.ஹபிபூர் ரஹ்மான், மின்சார வாரிய செயற்பொறியாளர்கள் சின்னையா, அல்லி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மனுவை வாங்க மறுத்த அமைச்சர் கீர்த்தனா: கெலவரப்பள்ளி அணையில் இளைஞர்களிடம் அலட்சியம் காட்டியதாகக் குற்றச்சாட்டு!

MUST READ