சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
வாரத்தின் தொடக்க நாளான நேற்று காலை தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,600க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,800க்கும் விற்பனையானது. இந்நிலையில் மாலையில் தங்கம் விலையில் திடீர் மாற்றம் காணப்பட்டது. அதாவது மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,770க்கும், சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10160க்கும் விற்பனையானது.
வெள்ளி விலையில் நேற்று காலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. மாலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.255க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து பார் வெள்ளி ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனையானது.

இதனை அடுத்து இன்று காலை தங்கம் விலை குறைந்தது. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ. 1,09,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,670க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை மீண்டும் உயர்வு: ஒரு சவரன் ₹1,09,360-க்கு விற்பனை!
