Homeசெய்திகள்சென்னைசென்னையில் நம்பர் லாட்டரி சீட்டு! சம்பாதிக்கும் பணத்தை இழக்கும் கூலித் தொழிலாளர்கள்

சென்னையில் நம்பர் லாட்டரி சீட்டு! சம்பாதிக்கும் பணத்தை இழக்கும் கூலித் தொழிலாளர்கள்

-

சென்னையில் நம்பர் லாட்டரி சீட்டு! சம்பாதிக்கும் பணத்தை இழக்கும் கூலித் தொழிலாளர்கள்

ஆட்டோ ஓட்டுநர்கள் கூலித் தொழிலாளிகளிடம் மூன்று மற்றும் நான்கு இலக்கு எண்கள் கொண்ட நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது. ஒருசில இடங்களில் காவல்துறை நெருக்கடி காரணமாக விற்பனை டிஜிட்டலுக்கு மாறி உள்ளது. 40,80,110 ரூபாய்க்கு லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. எண்களுக்கு ஏற்றது போல் பரிசு தொகை மாறும்.

சென்னையில் நம்பர் லாட்டரி சீட்டு! சம்பாதிக்கும் பணத்தை இழக்கும் கூலித் தொழிலாளர்கள்
மூன்று, நான்கு இலக்க எண்கள் கொண்ட லாட்டரி சீட்டு விற்பனை

சென்னையில் பல்வேறு இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை கள்ளத்தனமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே  விற்பனை நடைபெற்று வருகிறது.

சென்னையில் நம்பர் லாட்டரி சீட்டு! சம்பாதிக்கும் பணத்தை இழக்கும் கூலித் தொழிலாளர்கள்
மூன்று இலக்க எண்கள் லாட்டரி சீட்டு

மேலும் போரூர், பூந்தமல்லி, கிண்டி, எம்.எம்.டி.ஏ, வடபழனி,  பாடி, உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ஒருசில இடங்களில் காவல்துறை நெருக்கடி காரணமாக டிஜிட்டல் மூலமாகவும் லாட்டரி எண்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. பொதுவாக தங்களது தொலைபேசியில் மூன்று இலக்க எண்கள் நான்கு இலக்கு எண்களை பதிவு செய்து அதற்கு ஏற்றது போல் கூகுள் பே மூலமாக பணம் அனுப்பி மறுநாள் வெற்றி தோல்வியை மீண்டும் டிஜிட்டல் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம். தற்போது லாட்டரி விற்பனை  நடைபெறுகிறது

இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் கூலி தொழிலாளிகள் ஏராளமானோர் தாங்கள் அன்றாடம் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக இந்த லாட்டரி சீட்டு வாங்கி தங்களது பொருளாதாரத்தை இழந்து வருகின்றனர். இது தொடர்பாக சைபர் க்ரைம் போலிசார் உதவியுடன் சட்ட ஒழுங்கு போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ