spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபா. ரஞ்சித் இயக்கும் 'வேட்டுவம்' படத்தின் சுவாரஸ்ய தகவல்!

பா. ரஞ்சித் இயக்கும் ‘வேட்டுவம்’ படத்தின் சுவாரஸ்ய தகவல்!

-

- Advertisement -

பா. ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.பா. ரஞ்சித் இயக்கும் 'வேட்டுவம்' படத்தின் சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பா. ரஞ்சித். அதேசமயம் தயாரிப்பாளராகவும் வலம் வரும் இவர், அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார். மேலும் ‘சார்பட்டா பரம்பரை 2’ படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர், வேட்டுவம் எனும் திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார். இதில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க ஆர்யா வில்லனாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.பா. ரஞ்சித் இயக்கும் 'வேட்டுவம்' படத்தின் சுவாரஸ்ய தகவல்! இவர்களைத் தவிர கலையரசன், லிங்கேஷ், சோபிதா துலிபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ஏற்கனவே தகவல் கசிந்தது. கேங்ஸ்டர் ஜானரில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இதன் படப்பிடிப்பு தொடங்கி கும்பகோணம், மயிலாடுதுறை, சென்னை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பா. ரஞ்சித் இயக்கும் 'வேட்டுவம்' படத்தின் சுவாரஸ்ய தகவல்!இந்த நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில், சோபிதா துலிபாலா, தினேஷ் மற்றும் ஆர்யா ஆகிய இருவருடனும் இணைந்து முழு நீள கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் இவருடைய கதாபாத்திரம் வலுவான கதாபாத்திரமாக இருக்கும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ