தயாரிப்பாளர் தாணு, STR 49 படம் குறித்த முக்கியமான ட்வீட்டை டெலிட் செய்துள்ளார்.சிம்பு நடிப்பில் கடைசியாக ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து சிம்பு, ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிம்பு எடுத்த திடீர் முடிவால், STR 49 படமானது கைமாறியது. எனவே வெற்றிமாறன் தான் சிம்புவின் 49வது திரைப்படத்தை இயக்க உள்ளார் என்றும் கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரிக்கப் போகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி வெளியான அறிவுப்பு ப்ரோமோவை பார்க்கும்போது இந்த படமானது ‘வடசென்னை’ படத்தின் யூனிவர்ஸாக உருவாகும் போல் தெரிகிறது.
இருப்பினும் வெற்றிமாறன், நடிகர் சிம்புவை வேறொரு பரிமாணத்தில் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் சாய் பல்லவி கதாநாயகியாகவும் அனிருத் இதன் இசையமைப்பாளராகவும் கமிட்டாகியுள்ளார்கள் என பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, STR 49 படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று (செப்டம்பர் 26) மாலை 5.30 மணி அளவில் வெளியாகும் என்று குறிப்பிட்டு, ட்வீட் ஒன்றினை வெளியிட்டு, உடனடியாக அதனை டெலிட்டும் செய்துள்ளார். இதனால் குழப்பமடைந்த ரசிகர்கள், அந்த ட்வீட்டை பகிர்ந்து ஏன் தயாரிப்பாளர் இதை டெலிட் செய்துவிட்டார்? என்று சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
‘STR 49’ குறித்த முக்கியமான ட்வீட் …. உடனே டெலிட் செய்த தயாரிப்பாளர்…. குழப்பத்தில் ரசிகர்கள்!
-
- Advertisement -