spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபொங்கல் ரேஸில் இருந்து விலகிய '2கே லவ் ஸ்டோரி'.... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பொங்கல் ரேஸில் இருந்து விலகிய ‘2கே லவ் ஸ்டோரி’…. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

2கே லவ் ஸ்டோரி திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பொங்கல் ரேஸில் இருந்து விலகிய '2கே லவ் ஸ்டோரி'.... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் 2கே லவ் ஸ்டோரி. இந்த படத்தில் அறிமுக நடிகர்கள் ஜெகவீர், மீனாட்சி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் பாலசரவணன் வினோதினி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை சிட்டி லைட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அதே சமயம் இந்த படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பொங்கல் ரேஸில் இருந்து விலகிய '2கே லவ் ஸ்டோரி'.... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!அதைத்தொடர்ந்து இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் 2025 பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகும் என புதிய போஸ்டர் ஒன்றை வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ