Homeசெய்திகள்சினிமா'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்த பிரபல நடிகை!

‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்த பிரபல நடிகை!

-

- Advertisement -

கடந்த 2023 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. நெல்சன் இந்த படத்தை இயக்கியிருந்தார். அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார்.'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்த பிரபல நடிகை! வழக்கம்போல் ரஜினியின் மாஸ் கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலிலும் அடித்து நொறுக்கியது. அதைத்தொடர்ந்து ரஜினி நடிப்பில் ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. மேலும் ‘கூலி’ படப்பிடிப்பை முடித்த ரஜினி, ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்துள்ளார். 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்த பிரபல நடிகை!அதன்படி இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிர்னா மேனன், யோகி பாபு ஆகியோர் படப்பிடிப்பில் இணைந்துள்ளனர். இவர்களை தவிர எஸ்.ஜே. சூர்யா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் இப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்த பிரபல நடிகை!இந்நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது ரஜினியுடன் இணைந்து நடித்த படையப்பா திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகளை நிறைவு செய்த அதே நாளில் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ