spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல மலையாள நடிகர்.... யார் தெரியுமா?

விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல மலையாள நடிகர்…. யார் தெரியுமா?

-

- Advertisement -

பிரபல மலையாள நடிகர் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியிருக்கிறது.விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல மலையாள நடிகர்.... யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவருடைய 50வது படமாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து இவர் வெற்றிமாறனின் விடுதலை 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இதற்கிடையில் ட்ரெயின், காந்தி டாக்ஸ், ஏஸ் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் விஜய் சேதுபதி. மேலும் கடைசி விவசாயி பட இயக்குனர் மணிகண்டன் இயக்கும் புதிய வெப் தொடர் ஒன்றையும், பாண்டிராஜ் இயக்கும் புதிய படம் ஒன்றையும் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை பூரி ஜெகன்நாத் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல மலையாள நடிகர்.... யார் தெரியுமா? இன்னும் சில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர இந்த படத்தில் நடிகை தபு, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்க உள்ளார் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

we-r-hiring

நடிகர் பகத் பாசில் ஏற்கனவே வேலைக்காரன், மாமன்னன், புஷ்பா ஆகிய படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்ரம் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ