Homeசெய்திகள்சினிமாதளபதி 69 படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்....விஜயின் அடுத்த பிளான் என்ன?

தளபதி 69 படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்….விஜயின் அடுத்த பிளான் என்ன?

-

நடிகர் விஜய் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். தளபதி 69 படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்....விஜயின் அடுத்த பிளான் என்ன?இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து விஜய் தனது 68வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் இந்த படம் டைம் டிராவல் கதைக்களத்தில் உருவாகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. தளபதி 69 படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்....விஜயின் அடுத்த பிளான் என்ன?மேலும் இப்படமானது ஏற்கனவே சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்ட நிலையில் அடுத்தபடியாக ரஷ்யாவில் தற்போது படப்பிடிப்புகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவே கடைசி கட்ட படப்பிடிப்பாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி கவனம் பெற்றது. அடுத்ததாக வருகின்ற ஏப்ரல் 14 படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். தளபதி 69 படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்....விஜயின் அடுத்த பிளான் என்ன?இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் முழு நேர அரசியல்வாதியாக மாற இருக்கிறார் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவரே அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில் தளபதி 69 படத்தை எச் வினோத் இயக்கப் போவதாக கிட்டத்தட்ட உறுதியான தகவல் வெளியானது. அதே சமயம் தளபதி 69 படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்தன. தளபதி 69 படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்....விஜயின் அடுத்த பிளான் என்ன?ஆனால் தற்போது ஒரு சில காரணங்களால் இந்த தயாரிப்பு நிறுவனம் தளபதி 69 படத்தில் இருந்து விலகி விட்டதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே தளபதி 69 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ