Homeசெய்திகள்சினிமாநடிகர் பரத் நடிக்கும் 'தலைமைச் செயலகம்'..... ரிலீஸ் எப்போது?

நடிகர் பரத் நடிக்கும் ‘தலைமைச் செயலகம்’….. ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

நடிகர் பரத் நடிக்கும் தலைமைச் செயலகம் வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் பரத் நடிக்கும் 'தலைமைச் செயலகம்'..... ரிலீஸ் எப்போது?நடிகர் பரத், செல்லமே, காதல் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அதன் பின்னர் பல வெற்றி படங்களில் நடித்து வந்த இவருக்கு சமீப காலமாக எதிர்பார்த்த அளவில் பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தருவதில்லை. கடைசியாக பரத், லவ், இப்படிக்கு காதல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் சுள்ளான் சேது திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் பரத், தலைமைச் செயலகம் எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் பரத்துடன் இணைந்து கிஷோர், ஸ்ரியா ரெட்டி, ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நடிகர் பரத் நடிக்கும் 'தலைமைச் செயலகம்'..... ரிலீஸ் எப்போது?இந்த படத்தை வசந்த பாலன் இயக்க படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படமானது அரசியல் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற மே 17ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ