spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ஸ்வீட் ஹார்ட்' ஒரு ஜாலியான படம்.... வீடியோ வெளியிட்ட ரியோ ராஜ்!

‘ஸ்வீட் ஹார்ட்’ ஒரு ஜாலியான படம்…. வீடியோ வெளியிட்ட ரியோ ராஜ்!

-

- Advertisement -

நடிகர் ரியோ ராஜ் ஸ்வீட் ஹார்ட் படம் குறித்து  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றி ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்தவர் ரியோ ராஜ். 'ஸ்வீட் ஹார்ட்' ஒரு ஜாலியான படம்.... வீடியோ வெளியிட்ட ரியோ ராஜ்!அதைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதேசமயம் கடந்த 2023ல் இவரது நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்றது. அடுத்தது சமீபத்தில் வெளியான நிறம் மாறும் உலகில் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் ரியோ ராஜ். அதே சமயம் இவர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ஸ்வீட் ஹார்ட் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தினை புதுமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ். குமார் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்க பாலாஜி சுப்ரமணியம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் ரியோ ராஜுடன் இணைந்து கோபிகா ரமேஷ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். எமோஷனல் கலந்த ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் இன்று (மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் நடிகர் ரியோ ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படம் குறித்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Rio Raj (@rio.raj)

we-r-hiring

அதில் அவர் கூறியிருப்பதாவது, “எங்களுடைய ஸ்வீட் ஹார்ட் இன்று முதல் உங்கள் கையில். நம்மளுடைய ஸ்வீட் ஹார்ட் ஆக மாறி உள்ளது. இந்த படத்தில் நிறைய காமெடி இருக்கும். அதில் அழகான எமோஷன்ஸ் இருக்கும். இந்த படம் ஒரு ஜாலியான படம். எல்லோரும் இப்படத்தை திரையரங்கிற்கு வந்து பாருங்கள். எல்லோருக்குமே இந்த படம் பிடிக்கும்” என்றுள்ளார்.

MUST READ