Homeசெய்திகள்சினிமாரீல் மட்டுமல்ல ரியல் வாழ்விலும் விஜயகாந்த் ஹீரோ - சிம்பு உருக்கம்

ரீல் மட்டுமல்ல ரியல் வாழ்விலும் விஜயகாந்த் ஹீரோ – சிம்பு உருக்கம்

-

- Advertisement -
விஜயகாந்த் மறைவுக்கு பிரபல நடிகர் சிலம்பரசன் இரங்கல் தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் காலமானார். இதையடுத்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேரில் சென்று அஞ்சலி செலுத்துவதோடு, மேலும் பலர் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகினர் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், இந்தி நட்சத்திரங்களும் அவரது மறைவுக்கு இரங்கல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், கோலிவுட்டின் முன்னணி நாயகன் சிம்புவும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், இழப்பு செய்தியை கேட்டு மனம் உடைந்து போனது. ரீல் மற்றும் ரியல் வாழ்க்கையிலும் அவர் ஒரு ஹீரோ. எப்போதும் நான் ஒரு சகோதரனாகவே பார்க்கும் நபர் அவர். உங்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். உங்கள் பெருமை என்றும் நிலைத்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, நடிகர் யோகிபாபும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். வயது வித்தியாசம் இன்றி, சிறியவர் பெரியவர் என அனைவரிடமும் சமமாக பழகும் குணம் கொண்டவர் என யோகிபாபு குறிப்பிட்டுள்ளார்.

MUST READ