spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'அமரன்' ஒரு அருமையான படம் ...... படக்குழுவினரை பாராட்டிய நடிகர் சிம்பு!

‘அமரன்’ ஒரு அருமையான படம் …… படக்குழுவினரை பாராட்டிய நடிகர் சிம்பு!

-

- Advertisement -

நடிகர் சிம்பு அமரன் திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருந்த அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் திரைக்கு கொண்டுவரப்பட்டது. 'அமரன்' ஒரு அருமையான படம் ...... படக்குழுவினரை பாராட்டிய நடிகர் சிம்பு!இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்திருந்தார். சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களைப் போல் அல்லாமல் இந்த படத்தில் மிகவும் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். அதன்படி இந்த படமும் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. சாய் பல்லவியும் வழக்கம்போல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஜி.வி. பிரகாஷின் இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. இவ்வாறு பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வரும் அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 150 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த வார இறுதிக்குள் இந்த படம் 200 கோடியை கடந்து விடும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் அமரன் திரைப்படத்தை பாராட்டி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

we-r-hiring

அந்த பதிவில், “அமரன் திரைப்படத்தை பார்த்தேன். இது ஒரு அருமையான படம். சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஒரு அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் மிகவும் ஆழமான அர்ப்பணிப்பை தந்துள்ளனர். மேலும் கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் சார் ஆகியோருக்கு ஹேட்ஸ் ஆப். ஒவ்வொரு காட்சியின் தரத்தையும் ஜிவி பிரகாஷின் இசை உயர்த்துகிறது. அன்பறிவ் மாஸ்டர்களின் சண்டை பயிற்சிகள் விறுவிறுப்பை தருகிறது. எடிட்டருக்கு சிறப்பு பாராட்டுகள். ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கலை நயத்துடன் தந்துள்ள இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. அவருடைய கடின உழைப்பு இந்த கதைக்கு உயிர் தந்துள்ளது. ஒட்டுமொத்த படக் குழுவினர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ