spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் இதில் இருக்கிறது... 'விடுதலை 2' குறித்து சூரி பேட்டி!

மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் இதில் இருக்கிறது… ‘விடுதலை 2’ குறித்து சூரி பேட்டி!

-

- Advertisement -

நடிகர் சூரி கடந்தாண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் 1 திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் இதில் இருக்கிறது... 'விடுதலை 2' குறித்து சூரி பேட்டி! இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தது விடுதலை பாகம் 2 திரைப்படம் உருவாகி இருக்கிறது. சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியார் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் இன்று (டிசம்பர் 20) உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகர் சூரி திருச்சியில் பேட்டியளித்திருக்கிறார். அதன்படி அவர் கூறியதாவது,”விடுதலை 2 படத்தில் கமர்சியலையும் தாண்டி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் இருக்கிறது. விடுதலை 2 படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யும். சினிமா ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை பாருங்கள். இந்த படத்திற்கு மக்கள் கொடுக்கும் ஆதரவை பொறுத்து விடுதலை 3 படத்தை எடுப்போம். விடுதலை 2 படத்தில் வாத்தியார் யார் என்பது குறித்து விரிவாக இருக்கும். நானும் இதில் இருப்பேன். மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் இதில் இருக்கிறது... 'விடுதலை 2' குறித்து சூரி பேட்டி!விடுதலை 2 படம் அனைவரின் வாழ்வோடு ஒன்றிணைய கூடியதாக இருக்கும். இந்த படத்தை பார்த்துவிட்டு வெளிவருபவர்களுக்கு நிச்சயம் ஒரு வலி மிகுந்த உணர்வைத் தரும். அடுத்தடுத்த படங்களில் நான் கதாநாயகனாகவே பயணிப்பேன். நல்ல கதை அமைந்தால் சிவகார்த்திகேயனோடு மீண்டும் இணைந்து நடிப்பேன். சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிப்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் எனக்கு எப்போதும் ஹீரோ என்னுடைய தம்பி சிவகார்த்திகேயன் தான்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ