- Advertisement -
எனது தனி உரிமை தற்போது பாதுகாப்பாக இல்லை என்று பிரபல நடிகை பாவனா தெரிவித்துள்ளார்.

2000-த்தில் தமிழிலும், மலையாளத்திலும் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை பாவனா. தமிழில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்த பாவனாவுக்கு, அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவியத் தொடங்கின. அடுத்து பரத்துடன் வெயில், கூடல் நகர், வாழ்த்துகள், வினய்யுடன் ஜெயம் கொண்டான், ஜெயம் ரவியுடன் தீபாவளி ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதில் தீபாவளி படத்தில் சிறந்த நடிப்பை வௌிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து அஜித்துக்கு ஜோடியாக அசல் படத்தில் நடித்திருந்தார்.


தமிழ் மட்டுமன்றி மலையாளத்திலும் அவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நவீன் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இடையே, நடிகர் திலீப்குமாரால் பல பிரச்சனைகள் உருவெடுத்தன. இந்த பிரச்சனையால் காவல்நிலையம் மற்றும் நீதிமன்றத்திற்கு மாறி மாறி அலைந்து திரிந்தார் நடிகை பாவனா. இந்நிலையில், அவர் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளது, வைரலாகி வருகிறது.



