Homeசெய்திகள்சினிமாஇணையத்தை கலக்கும் இவானா... புகைப்படங்கள் வைரல்...

இணையத்தை கலக்கும் இவானா… புகைப்படங்கள் வைரல்…

-

- Advertisement -
kadalkanni
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் இவானா. தமிழில் பாலா இயக்கிய நாச்சியார் படத்தின் மூலம் இவர் நாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்னதாக மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். தமிழிலும் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படத்தில் இவானா நாயகியாக நடித்திருப்பார். இத்திரைப்பம் மாபெரும் வெற்றி பெற்றதோடு, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததோடு, படத்தின் நடிகர் நடிகைகளுக்கும் நல்ல புகழ் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் இவானா நடித்து வருகிறார். கிரிக்கெட் நட்சத்திரம் தோனி தமிழில் முதன் முதலாக தயாரித்த எல்ஜிஎம் படத்தில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இதைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷூக்கு ஜோடியாக கள்வன், மதிமாறன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், சுற்றுலா சென்றிருக்கும் நடிகை இவானா சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன

MUST READ